கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலியான கூகுள் பே நாடு முழுவதும் ஏராளமான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக பணம் செலுத்த மற்றும் விரைந்து செலுத்த முடிவதால் பலரும் இதை பயன்படுத்தி வருகின்றனர். யு.பி.ஐ ஐடி, மொபைல் எண் மற்றும் கி.யூ.ஆர் கோட் ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.
Advertisment
அந்த வகையில், Split money வசதி குறித்து நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். அதாவது, பில் செலுத்த வேண்டிய நபர்களுக்கு சரிபாதியாக கணக்கு பிரித்து அந்த தொகை குறித்து அவர்களுக்கு கூகுள் பே-ல் Request அனுப்புவதாகும். நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது ஹோட்டல் பில் அல்லது மற்ற பில் ஷேரிங் பயன்பாட்டிற்கு இந்த வசதி உதவியாக இருக்கும்.
Split money வசதி எவ்வாறு பயன்படுத்துவது?
இதற்கு முதலில் கூகுள் பே-ல் குரூப் ஓபன் செய்ய வேண்டும். அதாவது யாரெல்லாம் பில் ஷேர் செய்கிறார்களே அவர்களை Add செய்து கூகுள் பே குரூப் ஓபன் செய்ய வேண்டும்.
Advertisment
Advertisement
கூகுள் பே ஓபன் செய்து முகப்பு பக்கத்தில் உள்ள “New Payment” பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ‘Transfer Money’ டேப் கொடுத்து “New group” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இப்போது contacts பக்கம் ஓபன் ஆகும். யாரெல்லாம் பில் ஷேர் செய்கிறார்களே அவர்களின் contacts Add செய்யவும்.
அடுத்ததாக வரும் ஸ்கீரினில் குரூப்பிற்கு பெயர் வைப்பதற்கான ஆப்ஷன் காண்பிக்கும். இப்போது ‘Split an expense’ பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது மொத்த பில் கட்டணத்தை பதிவிட வேண்டும். கூகுள் பே தானாகவே அனைவரும் சரி பாதியாக செலுத்த வேண்டிய கட்டணத்தை காண்பிக்கும். இதை நீங்கள் பயன்படுத்தலாம், அல்லது தனியாகவும் கட்டணத்தை குறிப்பிடலாம். இதை செய்ய பின் "Send request " ஆப்ஷன் கொடுக்கவும்.
இப்போது உங்கள் நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு (குரூப் உருவாக்கியவருக்கு) பணத்தை அனுப்புவார்கள். அதை நீங்கள் பெற்று மொத்த பில் கட்டணத்தையும் செலுத்தலாம்.
யாரெல்லாம் பணம் அனுப்பியுள்ளார்கள் என்பதை Bill details ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் பார்க்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“