கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் கூகுள் போட்டோஸ் செயலி பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் ப்ரி-லோட் (இன்-பில்ட்) செய்யப்பட்ட செயலியாக உள்ளது. கூகுள் போட்டோஸ் மூலம் நீங்கள் போன் கேமராவில் எடுக்கும் போட்டோ, வீடியோக்களை இதில் பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் எடிட்டிங் அம்சம், மேஜிக் இரேசர் போன்ற அம்சங்களும் இதில் உள்ளது.
இந்நிலையில் தற்போது புதிய வீடியோ எஃபெக்ட்ஸ் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 12 புதிய வீடியோ எஃபெக்ட்ஸ் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சங்கள் ஏற்கனவே உள்ள பில்டர்களுடன் இணைந்து பயன்படுத்தலாம். இந்த அம்சங்கள் பயன்படுத்தினாலும் ஒரிஜினல் வீடியோவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
B&W film, Lomo, Dust Mix, Paper tear, Light leak, Film mood, Fisheye, Chromatic, Vintage, Layouts, Poster and Retro film போன்ற 12 எஃபெக்ட்ஸ்களைக் கொண்டுள்ளது.
எவ்வாறு பயன்படுத்துவது?
முதலில் உங்கள் கூகுள் போட்டோஸ் செயலியை அப்டேட் செய்யவும். அடுத்து ஆப்க்குள் சென்று எந்த வீடியோவை எடிட் செய்ய வேண்டுமோ அதை ஓபன் செய்து எடிட் பட்டன் கொடுக்கவும். அடுத்து கீழே உள்ள ‘Effects’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு வேண்டிய எஃபெக்ட்ஸை வீடியோவில் சேர்த்து அதை ப்ரீ-வியூ செய்து பார்த்து அப்ளை செய்யவும்.
எனினும் கூகுளின் இந்த அம்சம் தற்போது கூகுள் ஒன் சப்ஸ்கிரைபர்கள், பிக்ஸல் போன் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“