Advertisment

இனி அதிகம் ஃபன் செய்யலாம்: கூகுள் போட்டோஸில் விரைவில் ஏ.ஐ

Google Photos Generative AI: உங்கள் போட்டோ, வீடியோக்கள் ஆட்டோமேட்டிக்காக கலெக்ஷன்களாக கிரியேட் செய்யப்பட்டு அதற்கு ஒரு பெயரும் கொடுக்கிறது.

author-image
WebDesk
Aug 16, 2023 13:59 IST
The Memories tab

The Memories tab seems to replace the Sharing tab. (Image: Google)

உங்கள் நினைவுகளை மேலும் இனிமையாக்க கூகுள் போட்டோஸில் ஏ.ஐ மூலம் ஆட்டோமேட்டிக் கலெக்ஷன்கள் கிரியேட் செய்யப்பட்டு அதற்கு ஒரு பெயரும் கொடுக்கப்படுகிறது. கூகுள் போட்டோஸ் ஆப்-ல் 'Memories' என்ற ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது அதைப் பயன்படுத்தி ஆட்டோமேட்டிக்காக கிரியேட் செய்யப்பட்ட போட்டோ, வீடியோவை நமக்கு காண்பிக்கிறது. மேலும் ஏ.ஐ மூலம் இந்த 'Memories' க்கு ஒரு பெயரும் வைக்கலாம்.

Advertisment

Memories சென்று 'Help me title' என்ற ஆப்ஷன் கிளிக் செய்தால் அந்த போட்டோ, வீடியோக்களுக்கு ஏற்ற வகையில் ஏ.ஐ மூலம் தானாகவே ஒரு பெயரும் கொடுக்கப்படுகிறது. மேலும் பெயர் வைக்க ஏ.ஐக்கு நீங்களாகவே “hint” கொடுக்கலாம். எ.கா: “romantic” or “adventure” என்ற hint கொடுத்தால் ஏ.ஐ இதைப் பயன்படுத்தி உங்களுக்கு டைட்டில் பரிந்துரைக்கும்.

இந்த வசதி தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வரும் என கூகுள் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment