கூகுள் ஃபோன்களுக்கு கேஸ்பேக் ஆஃபர்!

பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தொழில்நுட்ப உலகில் அதிவேகத்துடன் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனம், ஸ்மார்ஃபோன்கள் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு கேஸ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு சிட்டி பேங்க் சார்பில் கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 2 ஃபோனுக்கு ரூ.10,000 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.8,000 வரை கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.கூகுளின் இந்த அதிரடியான ஆஃபர், வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கேஷ்பேக் சாஃபரை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவில் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ஃபோனின் விலை ரூ. 61,000 ஆகும். ஆனால், ஃபிளிஃப்கார்டில் ரூ. 49,999 க்கு விற்கப்படுகிறது. சிட்டி பேங்க் கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இதே விலையில் வாங்கிக் கொள்ளலாம். இந்த வங்கி வழங்கும் கேஷ்பேக் ஆஃபர், பணம் செலுத்திய பின்பு 90 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் இந்த ஆஃபரை பயன்படுத்தலாம்.

பிக்சல் 2 எக்ஸ்எல் ரூ.58,999 க்கு விற்பனையாகிறது. சிட்டி பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ. 50,999 க்கு வாங்கிக்கொள்ளலாம்.

×Close
×Close