Google Pixel 3 review : ஆப்பிளும் சாம்சங்கும் சாம்ராஜ்ஜியம் நடத்திய ஸ்மார்ட்போன்கள் உலகினை அசைத்துப் பார்க்கும் வகையில் எந்த போன்களும் சமீபமாக வரவில்லை என்றதை மாற்றி அமைத்தது ஒன்ப்ளஸ் போன்கள். ஆனால் ஒன்ப்ளஸ் போன்கள் அனைத்தும் மிட்ரேஞ்ச் ப்ரீமியம் போன்கள்.
ஹையர் எண்ட் போன்களில் இந்த இரண்டு பெரிய கம்பெனிகளுக்கும் நடுவில் போட்டி போட களம் இறங்கியிருக்கிறது கூகுள் பிக்சல் 3 போன்கள். நிச்சயமாக ஐபோனின் புது வரவுகளுக்கும் சாம்சங் கேலக்சியின் நோட் 9ற்கும் சரியான போட்டியாளராக நிச்சயம் இந்த போன் இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கூகுள் பிக்சல் 3 ( Google Pixel 3 )சிறப்பம்சங்கள்
5.5 அங்குல FHD, OLED திரை கொண்டிருக்கும் இந்த போனை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.
எச்.டி.ஆர் சப்போர்ட் செய்யும் இந்த போனின் ப்ரோசசர் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ஆகும். இதன் கிராபிக்ஸ் யூனிட் ஆட்ரெனோ 630 பிராச்சரில் இயங்குகிறது.
ஆண்ட்ராய்ட் 9.0 பையில் இயங்க இருக்கும் இந்த போனின் பேக் கேமராக்கள் 12.2 எம்.பி மற்றும் 8 எம்.பி ஆகும். டூயல் ஃபிரண்ட் ஃபைரிங் ஸ்பீக்கர்ஸ் கொண்டிருக்கிறது. வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் வெளிவர இருக்கிறது இந்த போன்.
நவம்பர் 1 முதல் இந்த கூகுள் பிக்சல் 3 இந்தியாவிற்கு விற்பனைக்கு வர இருக்கிறது. 64ஜிபி மெமரி கொண்ட போனின் விலை 71,000 ரூபாய்க்கும், 128ஜிபி மெமரி கொண்ட போனின் விலை 80,000 ரூபாய் ஆகும். கூகுள் பிக்சல் 3XL சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
லோ லைட் போட்டோகிராபிக்கென உருவாக்கப்பட்ட கூகுள் பிக்சல் 3
கேமரா போன்களின் ராஜா என்றே இந்த பிக்சல் 3 போனை அழைக்கலாம். காரணம் இந்த கேமராவில் இருக்கும் சிங்கிள் கேமரா லென்சின் திறன்கள் தான். 12.2MP, f/1.8 அப்பேச்சருடன் வெளிவரும் இந்த கேமரா அதிக அளவு ஒளியை உள்ளே கிரகித்துக் கொண்டு நல்ல போட்டோக்களை தருகிறது. மிகவும் குறைவான ஒளியுள்ள சூழலிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது இந்த போன்.
எட்டு தனித்தனி எக்போஷர் செட்டிங்ஸுடன் வெளிவரும் இந்த கேமரா சாஃப்ட்வேர் போஸ்ட் ப்ரோடெக்சன் ஒர்க்கிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பொருட்களின் (Object) அருகில் சென்று போட்டோ எடுக்கும் போது மிகவும் துல்லியமான மற்றும் நுணுக்கமான விவரங்களை உள்ளடக்கிய போட்டோக்களை தருகிறது இந்த போன்.
இங்கே பதியப்படும் அனைத்து புகைப்படங்களும் இணையதளத்திற்காக அளவுகள் மற்றும் பிச்கல்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் போனின் வழியாக பார்வையிட்டால் இதன் நுணுக்கங்கள் மற்றும் வித்தியாசங்களை நீங்கள் உணரலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/google-pixel-3-camera-sample-4.jpg)
கேமரா செட்டிங்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய வசதிகள்
குறிப்பிட்டு சொல்லும்படியான இரண்டு முக்கிய அம்சங்கள் கேமரா செட்டிங்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. டாப் ஷாட் (Top Shot) மற்றும் சூப்பர் ரெஸ் Zoom ( Super Res Zoom) செட்டிங்க் மூலமாக ஒரு புகைப்படம் எடுப்பதற்கு முன்பான ஃப்ரேம்கள் மற்றும் எடுக்கப்பட்டதிற்கு பின்பான ஃப்ரேம்கள் என இரண்டனையும் போன் சேமித்து வைத்துக் கொள்ளும். முந்தைய இரண்டு ஃபிரேம்களிலும் தவறு இருக்கும் பட்சத்தில் மிச்சம் இருக்கும் ஃப்ரேம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/pixel-3-main-6.jpg)