Google Pixel 3 XL : கூகுள் பிக்சல் 3 மற்றும் கூகுள் பிக்சல் 3 XL போன்கள் மிக சமீபத்தில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த இரண்டு போன்களில் கூகுள் பிக்சல் 3 XL அதிக வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பிக்சல் 3 XL நோட்ச்சுடன் கூடிய பெரிய திரையுடன் வெளி வருகிறது. நவம்பர் 1ம் தேதியில் இருந்து தன்னுடைய விற்பனையை தொடங்க இருக்கும் இந்த போனின் விலை சுமார் ரூ. 83,000 ஆகும்.
நிச்சயமாக ஐபோன் XS மற்றும் கேலக்ஸி நோட் 9 போன்களுக்கு இணையாக திறமையுடன் செயல்படும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. To read this article in English
Google Pixel 3 XL சிறப்பம்சங்கள் என்னென்ன ?
6.3 அங்குல ஃபெல்க்சிபல் OLED திரையுடன் வெளிவருகிறது இந்த போன். 2960 x 1440 பிக்சல் ரெசலியூசனுடன் வரும் இந்த போன் நோட் பிங்க், ஜெஸ்ட் பிளாக், க்ளியர்லி வொய்ட் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாக உள்ளது.
கூகுள் பிக்சல் 3 XL ஃபோனை குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 845 ப்ரோஸ்ஸர் இயக்குகிறது. 4ஜிபி RAM உடன் கூடிய 64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு சேமிப்புத் திறன்கள் கொண்ட வேரியேசன்களில் வெளியாகிறது.
ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போனில் 3.5mm ஹெட்போன் ஜேக் கிடையாது. மாறாக யூ.எஸ்.பி டைப் சி ஹெட்போன் மற்றும் அதற்கான அடாப்டர் இந்த போனுடன் வெளிவருகிறது.
Google Pixel 3 XL இதர சிறப்பம்சங்கள்
- போனின் முகப்பில் இரண்டு ஸ்பீக்க்ர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- 3,430 mAh திறன் கொண்ட பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
- 12.2 எம்.பி லென்ஸ் கேமரா இதன் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட சிங்கிள் லென்ஸ் கேமரா செட் அப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.