கூகுள் பிக்சல் போன் 3 XL -ன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

லீக்கான வீடியோவில் இருந்து நாம் அறிந்துகொண்ட சில முக்கிய தகவல்கள்...

கூகுள் பிக்சல் 3 XL  : கூகுள் பிக்சல் போன் வரிசையில் புதிய வெளியீடாக வர இருக்கும் 3 XL திறன்பேசியின் வீடியோ ஒன்று உக்ரேன் நாட்டின் இணையதளம் ஒன்றில் லீக்கானது. அந்த வீடியோவின் மூலம் நமக்கு தெரிய வந்திருக்கும் சில புதிய சிறப்பம்சங்கள் பற்றி ஒரு பார்வை.

லீக்கான வீடியோ

கூகுள் பிக்சல் 3 XL திறன்பேசியின் சிறப்பம்சங்கள்

6.7 அங்குல திரையுடன் வர இருக்கும் இந்த திறன்பேசி, இன்றைய மார்கெட்டில் வர இருக்கும் மிகப் பெரிய திரை கொண்ட திறன்பேசியாகும்.

இதற்கு முன்பு 6.4 அங்குல திரையுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 9 வந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி திறன்  3,430mAh ஆகும்.  12.2 எம்.பி பின்பக்க கேமராவையும் 8 எம்.பி முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது இந்த திறன்பேசி.

க்வால்கோம் ஸ்நாப்ட்ராக 845 ப்ரோசசருடன் வர இருக்கும் இந்த பிக்சல் 3 XL திறன்பேசியில் 4GB RAM மற்றும் 64GB இண்டெர்நெல் ஸ்டோர்ஜ்ஜுடனும் வருகிறது.

இயங்கு தளம் ஆண்ட்ராய்ட் 9 pie

கிராபிக்ஸ் பிராசஸ்ஸர் யூனிட் அட்ரெனோ 630

எப்போது வெளியாகிறது கூகுள் பிக்சல் 3 XL ?

கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL என இரண்டு திறன்பேசிகளையும் வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது கூகுள் நிறுவனம். இந்த திறன்பேசிகளுடன் பிக்சல் பட்ஸ் மற்றும் பிக்சல் புக் 2 இரண்டும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close