கூகுள் பிக்சல் 4 மற்றும் 4XL ஸ்மார்ட்போன்களின் கோட்நேம்ஸ் தெரியுமா?

கூகுள் பிக்சல் போனாது 6ஜிபி ரேம் மற்றும் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ராசசருடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Pixel 4, Pixel 4XL codenames
Google Pixel 4, Pixel 4XL codenames

Google Pixel 4, Pixel 4XL codenames : கடந்த வருடம், மிகச்சிறந்த கேமராக்களை கொண்ட ப்ரீமியம் போன்கள் என்ற பெயரை தக்கவைத்த கூகுள் பிக்சல் தற்போது அதன் அடுத்த வெர்ஷனுக்கு தயாரியுள்ளது. பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4XL என்ற அந்த இரண்டு போன்களுக்குமான கோட் வேர்ட்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிக்சல் 4க்கு கோரல் என்றும், பிக்சல் 4XL போனுக்கு ஃப்ளேம் என்றும், மூன்றாவது போனுக்கு நீடில்ஃபிஷ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று பெயரிகளும் AOSP என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. லேபிள் பிரச்சனைகள் எழும் போது ஆண்ட்ராய்ட் செலினக்ஸ் பாலிசி மூலம் இப்படி பொதுவாக இணைய தளத்தில் பதிவிடுவதும், அந்த பிரச்சனை என்பதை விளக்கவும் டெவலப்பர்கள் பயன்படுத்தப்படும் ப்ளாட்பார்ம் அது.  கூகுள் பிக்சல் போனாது 6ஜிபி ரேம் மற்றும் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ராசசருடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Pixel 4, Pixel 4XL codenames

இந்த மூன்று போன்களும் இந்த வருட இறுதிக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்சல் 4க்கு மட்டுமே கோட் நேம் இல்லை. இதற்கு முன்பு வெளியான பிக்சல் 3 மற்றும் அதன் வேரியண்ட், பிக்சல் 2 மற்றும் அதன் வேரியண்டுகளுக்கும் இப்படி கோட் நேம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மெர்லின் பிக்சல் XL, வஹூ (பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL), க்ராஸ்ஹாட்ச் பிக்சல் 3XL, போனிட்டோ (பிக்சல் 3A XL) போன்றவையும் கோட் நேம்களே.

மேலும் படிக்க : வாடிக்கையாளர்களுக்கு சோகமான செய்தியை அறிவித்த ஓப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம்!

Web Title: Google pixel 4 pixel 4xl codenames show aosp website

Next Story
வாடிக்கையாளர்களுக்கு சோகமான செய்தியை அறிவித்த ஓப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம்!Oppo drops R Series Smartphones
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com