ஜெமினி ஏ.ஐ வசதிகளுடன் கூகுள் பிக்சல் 8a இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கூகுளிள் ப்ரிமியம் வகை போனாகும். இது இந்தியாவில் ரூ.52,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதை தள்ளுபடி விலையில் ரூ.39,999க்கு பெற முடியும்.
கூகுள் பிக்சல் 8a சிறப்பம்சங்கள்
கூகுள் பிக்சல் 8a ஆனது 6.1 இன்ச் திரையுடன் OLED Actua டிஸ்ப்ளே 1080 x 2400 resolution மற்றும் 430 ppi உடன் வருகிறது. டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. Pixel 7a உடன் ஒப்பிடும் போது Pixel 8a-ன் Actua டிஸ்ப்ளே 40 சதவீதம் brighter-ஆக இருப்பதாக கூகுள் கூறுகிறது.
Pixel 8a ஆனது கூகுளின் Tensor G3 சிப்செட் மற்றும் Titan M2 பாதுகாப்பு கோப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. தொலைபேசியில் 8 ஜிபி LPDDR5x ரேம் பொருத்தப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில், பிக்சல் 8a ஸ்மார்ட் போன் 64 மெகாபிக்சல் முதன்மையான லென்ஸ் மற்றும் 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் டூயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. முன்பக்கத்தில், 13 மெகாபிக்சல் செஃல்பி கேமரா உள்ளது.
அதோடு கூகுளின் ஜெமினி ஏ.ஐ போனில் இன்பில்ட் ஏ.ஐ வசதியாக உள்ளது. பேட்டரியைப் பொறுத்தவரை, Pixel 8a ஆனது 4492 mAh பேட்டரியுடன் வருகிறது, கூகுளின் கூற்றுப்படி, ஒரு முறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.
ரூ.39,999-க்கு பெறுவது எப்படி?
கூகுள் பிக்சல் 8a இந்தியாவில் ரூ.52,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் இணையதளத்தில் போன் மே 14 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. ப்ரீ-ஆர்ட்ர் தொடங்கப்பட்டுள்ளது. 128 ஜிபி, 256ஜிபி வேரியன்ட் வரிசையில் போன் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கே நீங்கள் ஃபோனை ப்ரீ-ஆர்ட்ர் செய்தால், ஏராளமான ஆஃபர்களைப் பெறலாம். குறிப்பிட்ட வங்கி அட்டைகளுடன் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது போனின் விலையைக் குறைக்கும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு உடனடி தள்ளுபடி ரூ.4,000 பெறலாம்.
இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன் மூலம் கூகுள் பிக்சல் 8a போனை ரூ.39,999-க்கு பெறமுடியும். போன், ப்ரீ-ஆர்ட்ர் செய்தால் Pixel Buds A-Series ஐ வெறும் 999 ரூபாய்க்கு வாங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“