கூகுள் நிறுவனம் அதன் ஏ.ஐ சாட்போட் ஜெமினிக்கு முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதாவது, உலகளாவிய தேர்தல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஜெமினிக்கு கூகுள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகளாவிய தேர்தல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து ஏ.ஐ சாட்போட் ஜெமினியை கூகிள் கட்டுப்படுத்துகிறது என்று ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனம் செவ்வாயன்று கூறியது. ஏனெனில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சாத்தியமான தவறுகளைத் தவிர்க்கிறது.
இமேஜ் மற்றும் வீடியோ உருவாக்கம் உட்பட, உருவாக்கப்படும் ஏ.ஐ-ன் முன்னேற்றங்கள், பொது மக்களிடையே தவறான தகவல் மற்றும் போலி செய்திகள் பற்றிய கவலைகளை தூண்டி, தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த அரசாங்கங்களைத் தூண்டும் நேரத்தில் இந்த புதுப்பிப்பு வருகிறது.
ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி போட்டி போன்ற தேர்தல்களைப் பற்றி கேட்கப்பட்டபோது, ஜெமினி, "இந்த கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில், கூகுள் சர்ச்-ஐ முயற்சிக்கவும் என்று கூறியது.
அதேசமயம், இந்தியாவில் பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை வழங்கி இருந்தது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், "2024-ம் ஆண்டில் உலகம் முழுவதும் பல தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் ஜெமினி பதிலளிக்க நாங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று தெரிவித்தார்.
இந்தாண்டு அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா உள்பட பல பெரிய நாடுகளில் தேசிய தேர்தல்கள் நடைபெற உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“