Advertisment

கோவிட் முதல் பினோத் வரை: இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை

Top Google search 2020 லாக்டவுன் தூண்டப்பட்ட சலிப்பு புரிந்துகொள்வதற்கு உள்நாட்டிலுள்ள இந்தியர்கள் எவ்வாறு சர்ச் இன்ஜினை பெரிதும் நம்பியிருந்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கின்றன.

author-image
WebDesk
New Update
Google search 2020 covid binod sushant singh tamil news

Google search 2020

Top Searched Words in Google India Tamil News : கூகுள் இந்தியா தனது வருடாந்திர ‘தேடல்' முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், செய்தி, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து தனித்துவமான தருணங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கொடிய கோவிட் -19 நோய்த்தொற்று உலகெங்கிலும் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 'பேண்டமிக்' ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை. கூகுளின் வருடாந்திர அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த தேடல்கள், தொற்றுநோயால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் தூண்டப்பட்ட சலிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு உள்நாட்டிலுள்ள இந்தியர்கள் எவ்வாறு சர்ச் இன்ஜினை பெரிதும் நம்பியிருந்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கின்றன.

கவலைப்பட்ட பயனர்கள் சர்ச் இன்ஜினில் தொற்று குறித்த சில சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும், அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளைக் கண்டறியவும் தேடியுள்ளனர். கூகுளின் பட்டியலில் அதிகமாகக் காணப்பட்ட சில தேடல்களில் ‘நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?’ மற்றும் ‘எனக்கு அருகிலுள்ள கோவிட் சோதனை’ ஆகியவை அடங்கும். நாடு தழுவிய லாக்டவுனுக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கியதால், உள்ளூர் தேடல்கள் ‘எனக்கு அருகில்’ வினவல்கள் அதிகரித்தன. ‘எனக்கு அருகிலுள்ள பிராட்பேண்ட் இணைப்பு’ மற்றும் ‘எனக்கு அருகிலுள்ள லேப்டாப் கடை’ ஆகியவை மிகவும் பொதுவான தேடல்கள்.

ஆனால், இது ஒரு இருண்ட ஆண்டாக இருந்தபோதிலும், இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐபிஎல்) சுற்றியுள்ள உற்சாகம் குறைந்ததாகத் தெரியவில்லை. உண்மையில், கூகுள் இந்தியா புள்ளிவிவரங்களின்படி, ஐபிஎல் இந்த ஆண்டின் சிறந்த பிரபலமான தேடலாக இருக்கிறது.

மிகவும் வினோதமான தேடல் சொற்களில், ‘எப்படி’ மற்றும் ‘என்ன’ வினவல்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான பயனர்கள் ‘பினோத் என்றால் என்ன?’ என்று கேட்டிருக்கின்றனர்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடந்த தேர்தல்கள் குறிப்பிடத்தக்கத் தேடல் நடவடிக்கையைத் தூண்டின. அமெரிக்காவின் தேர்தல்களும், பீகார் மற்றும் டெல்லி தேர்தல்களும் ஒட்டுமொத்த பிரபலமான தேடல் முடிவுகளின் முதல் 10 பட்டியலில், மூன்றாவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்தன. அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமை.

2018-ம் ஆண்டு தற்கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குடியரசு தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, பிரபலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாலிவுட் நடிகர்கள் ரியா சக்ரவர்த்தி, அங்கிதா லோகண்டே, கங்கனா ரனாவத், அமிதாப் பச்சன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றனர்.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி திரைப்படமான ‘தில் பெச்சாரா’, 2020-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட சிறந்த பிரபலமான திரைப்படமாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ் அதிரடி படமான ‘சூரரைப் போற்று’ இருக்கிறது. 2020 வாழ்க்கை வரலாற்றின் ஆண்டாக இருந்தது. இதில், ‘தன்ஹாஜி’, ‘சகுந்தலா தேவி’ மற்றும் ‘குஞ்சன் சக்சேனா’ ஆகிய படங்கள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தன. கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்த ‘Extraction’ மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே ஹாலிவுட் படம்.

கடந்த ஆண்டு, ‘மக்களவைத் தேர்தல் முடிவுகள்’ இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட செய்திச் சொல்லாக இருந்தது. அதைத் தொடர்ந்து ‘சந்திரயான் 2’ இருந்தது. தற்செயலாக, பிரபலமான தேடல் சொற்களின் ஒட்டுமொத்த பட்டியலில் ‘கிரிக்கெட் உலகக் கோப்பை’ இந்த ஆண்டு இல்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment