கூகுள் தேடலில் இனி உங்கள் மொபைல்போனை ரீசார்ஜ் செய்யலாம்

Google Prepaid mobile recharge : மக்கள் தங்கள் மொபைல்போனுக்கு தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை கண்டுபிடித்து, ஒப்பிட்டு பார்த்து ரீசாரஜ் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தனது தேடு தளத்தில் புதிதாக, அறிமுகம் செய்துள்ளது.

Google Prepaid mobile recharge : மக்கள் தங்கள் மொபைல்போனுக்கு தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை கண்டுபிடித்து, ஒப்பிட்டு பார்த்து ரீசாரஜ் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தனது தேடு தளத்தில் புதிதாக, அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
google search recharge, google, google mobile recharge, prepaid recharge, airtel recharge, jio recharge, vodafone recharge, idea recharge, bsnl recharge

google search recharge, google, google mobile recharge, prepaid recharge, airtel recharge, jio recharge, vodafone recharge, idea recharge, bsnl recharge

மக்கள் தங்கள் மொபைல்போனுக்கு தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை கண்டுபிடித்து, ஒப்பிட்டு பார்த்து ரீசாரஜ் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தனது தேடு தளத்தில் புதிதாக, அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல், வோடாபோன்-ஐடியா, ஜியோ மற்றும் பிஸ்என்எல் சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு வசதியுள்ள மொபைல்போன் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

Advertisment

இந்தியாவில் உத்தேசமாக 1.1 பில்லியன் மொபைல்போன் இணைப்புகள் உள்ளன . அவற்றில் சுமார் 95 சதவிகிதம் ப்ரீபெய்டு இணைப்புகள் என கூகுள் நிறுவனம் கூறுகிறது. இந்த சந்தாதாரர்கள் தங்கள் கைபேசி இணைப்புகளை ரீசாரஜ் செய்ய பல்வேறு வழிகளை பயன்படுத்துகின்றனர். சந்தாதாரர்கள் தங்கள் கைபேசி இணைப்புகளை ரீசாரஜ் செய்யும் முறையை எளிதாக்க விரும்பி இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த வசதியை பெறுவதற்கான வழிமுறை

கூகுள் தேடு தளத்தில் ’ப்ரீபெய்டு மொபைல் ரீசாரஜ்’ அல்லது அது தொடர்பான உள்ளீட்டை தட்டச்சு செய்து தேடவும்.

Advertisment
Advertisements

அடுத்து வரும் தேடல் முடிவு பக்கத்தில் உள்ள படிவத்தில், வாடிக்கையாளரின் கைபேசி எண், கைபேசி இணைப்பு வழங்கும் நிறுவனம் (operator), அந்நிறுவனம் அமைந்துள்ள வட்டம் (circle) ஆகிய தகவல்களை நிரப்பி அந்த படிவத்தை சமர்பிக்கும் போது அனைத்து ப்ரீபெய்டு திட்டங்களும் பட்டியலிடப்படும்.

அதிலிருந்து ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்த பிறகு உங்களுக்கான சலுகைகள் அவற்றை வழங்கும் நிறுவனங்களான PayTM, MobiKwik, Google Pay போன்றவற்றால் பட்டியலிடப்படும். ஏதாவதொரு நிறுவனத்தை அவர்களது ஆப் மூலமாகவோ அல்லது அவர்கள் இணையதளம் மூலமாகவோ தேர்வு செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்த பின்பு, அந்நிறுவனம் ஒரு உறுதிப்படுத்துதல் பக்கத்தை காண்பிக்கும். அந்த பக்கத்தில் திரும்ப கூகுளுக்கு செல்வதற்கான ஒரு பட்டனும் இருக்கும்.

ரீசாரஜ் செய்யும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், வாடிக்கையாளர் உதவி மையத்தை நாடுவதற்கான வசதியும் அந்த உறுதிப்படுத்துதல் பக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Google Bsnl Vodafone Airtel Prepaid Recharge Mobile Recharge

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: