கூகுள் இணைய தேடலில் முட்டாள் என்று பொருள் தரும் Idiot என்ற வார்த்தையினை தேடினால், அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரெம்பினை முடிவாக அறிவிக்கிறது.
ட்ரெம்பின் அரசியல் கொள்கைகளை விரும்பாத ஒரு சிலர் மற்றும் ரெட்டிட் பயனாளிகள் முட்டாள் என்ற வார்த்தையும் அதற்கு டொனால்ட்டின் புகைப்படத்தினையும் இணைத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
பின்னர், அந்த லிங்கினை கேம்பைன் மூலமாக அதிக அளவு ட்ரெண்ட் செய்துவிட்டார்கள் டொனால்ட்டின் எதிர்ப்பாளர்கள்.
தற்போது கூகுளில் இடியட் என்று தேடினால், கூகுள் முதலில் காண்பிக்கும் புகைப்படம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்பின் புகைப்படம் தான்.
Google shows Trump as an Idiot
பப்பு என்று தேடினால் உடனே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலின் புகைப்படம் வரும். அதே போல் ஃபேக்கு என்று தேடினால் நரேந்திர மோடியின் புகைப்படம் வரும்.
இது போன்று ஒரு கட்சித் தலைவர் மீது மற்றொரு கட்சி உறுப்பினர்கள் இணையத்தில் பதிவிடுவது சமீபத்தில் மிக அதிக அளவில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
சிறிது காலத்திற்கு முன்பு வரை, இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்றால், நரேந்திர மோடி என்று காண்பித்துக் கொண்டிருந்தது கூகுள் நிறுவனம்.