Advertisment

அட... கூகுள் தேடலில் இனி இதுவும் தெரியுமா?

Instagram Tiktok Youtube Short Videos in Google Search குறுகிய வீடியோ கரோசல், அக்டோபர் 2020-ல் வெளியிடப்பட்ட கூகுள் கதைகள் வடிவமைப்பிலிருந்து வேறுபடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google search soon to show up Instagram Tiktok Youtube Short Videos Tamil News

Google search soon to show up Instagram Tiktok Youtube Short Videos

Google search shows Instagram Tiktok Youtube Short Videos : கூகுள் தற்போது ஒரு புதிய தேடல் அம்சத்தில் செயல்படுகிறது. அதாவது குறுகிய அல்லது ஷார்ட் வீடியோ தேடல்களை ஒருங்கிணைக்க உள்ளது. இந்த புதிய அம்சத்தை முதலில் ட்விட்டர் பயனர்கள் சாத் ஏ.கே மற்றும் பிரையன் ஃப்ரீஸ்லெபென் சுட்டிக்காட்டினர். குறுகிய வீடியோ, ‘பிரியாணி’ மற்றும் ‘பேக்கர்கள்’ போன்ற சில முக்கிய வார்த்தைகளுக்கு மட்டுமே காண்பிக்கப்படும் என்று பயனர்கள் தெரிவித்தனர். எங்களால் அதை நகலெடுத்து உறுதிப்படுத்த முடிந்தது. குறுகிய வீடியோ முடிவைக் கிளிக் செய்வதன் மூலம் அதே பிரவுசரை அல்லது பிரத்தியேக பயன்பாட்டில் முடிவைத் திறப்பதற்கான தேர்வு எங்களுக்குக் கிடைத்தது. இருப்பினும், நம் நாட்டில் டிக்டாக் பயன்பாடு தடைசெய்யப்பட்டதால் அதன் வீடியோக்களை திறக்க முடியவில்லை.

Advertisment

இந்தியாவில், ஃபையர் ஒர்க் டிவியின் தளத்திலிருந்து குறுகிய வீடியோக்களை கூகுளின் டிஸ்கவர் ஃபீட்  காட்டத் தொடங்கியது. ஆனால், புதிய அம்சத்தில், கூகுள் தேடல் முடிவுகளில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து குறுகிய வீடியோக்களைக் காண்பிக்கும். பிற குறுகிய வீடியோ பயன்பாடுகளை கூகுள் பின்னர் ஆதரிக்கக்கூடும்.

அறிக்கையின்படி, இந்த புதிய அம்சம், வீடியோ பயனர்களைக் குறுகிய வீடியோ பயன்பாட்டை தனித்தனியாக உள்ளிட வேண்டிய அவசியமின்றி, கூகுள் பயன்பாட்டிலிருந்து தேடல் முடிவுகளில் காண்பிக்கும் குறுகிய வீடியோக்களை திறக்க அனுமதிக்கும். இந்த அம்சத்தையும் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது என்று டெக்க்ரன்ச்சின் அறிக்கை கூறுகிறது.

இந்த அம்சம் தற்போது மொபைல் பயன்பாடு மற்றும் வலைத்தளங்களில் மட்டுமே சோதிக்கப்படுகிறது. மேலும், இப்போது அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. குறுகிய வீடியோ கரோசல், அக்டோபர் 2020-ல் வெளியிடப்பட்ட கூகுள் கதைகள் வடிவமைப்பிலிருந்து வேறுபடும்.

இந்த அம்சம் விரைவில் அதிகமான பயனர்களுக்கு வெளிவரும் மேலும், எதிர்காலத்தில் பரந்த அளவிலான தேடல் முடிவுகளையும் இணைக்கும். குறுகிய வீடியோக்கள் உலகின் பல பகுதிகளிலும் வளர்ந்து வரும் போக்காக மாறி வருவதால், பல தளங்களிலிருந்து குறுகிய வீடியோக்களுக்கான தேடல் முடிவுகளை ஒரே இடத்தில் கண்டுபிடிப்பது வசதியாக இருக்கும்.

இந்தியாவில், கூகுளின் டிஸ்கவர் ஃபீட் ஏற்கெனவே ஃபையர் ஒர்க் தளத்திலிருந்து உள்ளடக்கத்தைக் காட்டுகிறது. அதில் குறுகிய வீடியோக்களும் உள்ளன. கூகுள் டிஸ்கவர் ஃபீட்,பயனரின் ஆர்வங்களின் அடிப்படையில் பல்வேறு மூலங்களிலிருந்து உள்ளடக்கத்தைக் காட்டுகிறது. இந்த ஃபீடில் நிறுவனம் குறுகிய வீடியோக்களைக் காட்டத் தொடங்குவது இதுவே முதல் முறை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment