ஆங்கிலத்தில் டைப் செய்தால் உள்ளூர் மொழியில் முடிவுகளைக் காட்டும் கூகுளின் புதிய வசதி

பயனர்கள் கூகுள் தேடலில் இப்போது ஆங்கிலத்தில் அல்லது ரோமானிய எழுத்துக்களைப் பயன்படுத்தி டைப் செய்தாலும், அவர்கள் தொடர்புடைய இந்திய மொழியில் முடிவுகளைக் காண்பிக்கும்.

Google, Google MuRIL, Google new machine learning language tool, கூகுள், கூகுள் தேடல், கூகுள் முரில், Google Search, Google Maps in tamil, What is Google MuRIL

பயனர்கள் கூகுள் தேடலில் இப்போது ஆங்கிலத்தில் அல்லது ரோமானிய எழுத்துக்களைப் பயன்படுத்தி டைப் செய்தாலும், அவர்கள் தொடர்புடைய இந்திய மொழியில் முடிவுகளைக் காண்பிக்கும். இது இருமொழி இந்திய பயனர்களுக்கான தேடல் அனுபவங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அவர்கள் ஆங்கிலத்தில் சௌகரியமாக இல்லாவிட்டாலும், தேடல் வினவல்களைத் டைப் செய்வதற்கான ஒலிமொழிபெயர்ப்பைக் காணலாம். இந்திய மொழிகளுக்கான பன்மொழி பிரதிநிதிகள் அல்லது இந்திய மொழிகளை நோக்கிய ‘முரில்’ என்ற புதிய மொழி செயலாக்க மாதிரியையும் கூகுள் நிறுவனம் அறிவித்தது. இது மொழி செயலாக்கத்திற்கான எழுத்தில் இருந்து எழுத்துக்கு மாற்றுவது என்ற மாதிரியின் அடிப்படையில் செயல்படுகிறது.

“இந்தியாவுக்கு ஒரு தனித்துவமான விஷயம் என்னவென்றால், சாதனங்கள் உண்மையில் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பிராந்திய மொழிகளை விட ஆங்கிலத்தில் சாதனங்களுடன் தொடர்புகொள்வது மிகவும் எளிதானது. ஆனால், பல இந்திய பயனர்கள் தங்கள் சொந்த மொழியில் மிகவும் இயல்பாக உள்ளனர். மேலும், இந்த சாதனத்தை ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம்” என்று தேடல் மற்றும் பெங்களூரு தள முன்னணி பொறியியல் இயக்குனர் ஆனந்த் ரங்கராஜன் ஊடகங்களிடம் விளக்கினார்.

இந்திய மொழிகளில் டைப் செய்வது கடினம். அதாவது பயனர்கள் தங்கள் உள்ளூர் மொழியில் தேடுவதற்குகூட ரோமன் அல்லது லத்தீன் எழுத்துக்களை நம்பியிருக்கிறார்கள். “இதன் விளைவாக எங்கள் அமைப்புகள் ஆங்கிலத்தில் ஒரு வினவலைக் கண்டறிந்து ஒரு ஆங்கில மொழி முடிவைக் காண்பிக்கும். அவர்களின் உள்ளூர் மொழியில் முடிவுகளுடன் அவர்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டிருக்கும். அடுத்து வருகிற மாதங்களில், கூகுள் தேடல் இப்போது ஆங்கிலத்தில் டைப் செய்தாலும் தொடர்புடைய இந்திய மொழிகளில் முடிவுகளைக் காண்பிக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தி, வங்களாம், தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் இந்த அம்சம் முதலில் வெளிவரும். ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளுக்கிடையேயான தேடல் முடிவுகளை மேலும் நான்கு இந்திய மொழிகளுக்கு மாற்றுவதற்கான திறனை கூகுள் விரிவுபடுத்துகிறது. அந்த நான்கு மொழிகள் தமிழ், தெலுங்கு, வங்களாம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகள் ஆகும். முதலில் இந்த அம்சம் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கூகுள் மேப்ஸ் பயன்பாடு இப்போது இந்திய மொழிகளையும் காட்டுகிறது. வரைபட பயன்பாட்டில் ஒன்பது இந்திய மொழிகள் காட்டப்படுகிறது. பயனர்கள் பயன்பாட்டில் உள்ள மொழி அமைப்புகளை அறிந்து இடங்களைத் தேடலாம். அவர்கள் விரும்பும் மொழியில் வழிகாட்டுதல்களைப் பெறுவார்கள்.

கூகிள் லென்ஸ் உடன் கிடைக்கும் மற்றொரு அம்சம் இந்தியில் வீட்டுப்பாட உதவியை கூகுள் அளிக்கிறது. கூகுள் லென்ஸின் பயன்பாட்டிற்கான முதல் சந்தையாக இந்தியா உள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​மாணவர்கள் சமன்பாடுகளை கூகுள் லென்ஸில் கணித சிக்கல்களை சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் ஒரு தீர்வைப் பெறலாம். இந்த அம்சம் இந்திக்கும் விரிவுபடுத்தப்படும். கூகுள் லென்ஸில் கணித சிக்கல் சுட்டிக்காட்டப்பட்டால், அது ஒரு வீட்டுப்பாடக் கேள்வியின் படத்தை தேடுதலாக மாற்றுகிறது. தேடுதலின் அடிப்படையில், சிக்கலை விளக்க உதவும் படிப்படியான வழிகாட்டிகளையும் வீடியோக்களையும் இது காட்டுகிறது.

இந்திய மொழிகளுக்கான கூகிளின் முரில் (MuRIL) மாதிரி

இயல்பான மொழி ஆக்கத்திற்கான புதிய அணுகுமுறையையும் கூகுள் காட்டியுள்ளது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இது இந்திய மொழிகளுக்கான பன்மொழி பிரதிநிதிகள் அல்லது ‘முரில்’ என அழைக்கப்படுகிறது. இது பல பிராந்திய இந்திய மொழிகளில் அளவிடக்கூடிய ஒரு சக்திவாய்ந்த புதிய பன்மொழி மாதிரி என்றும், ரோமானிய ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி இந்தி எழுதும் போது மொழிபெயர்க்கப்பட்ட உரைக்கு இது உதவுகிறது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற அம்சங்கள் முந்தைய மாதிரிகளில் காணவில்லை. ஒரு வாக்கியத்திற்குள் உணர்வைத் தீர்மானிப்பதில் முரில் மேலும் நன்மை தரும் என்று கூகுள் கூறுகிறது.

“ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மாதிரியை உருவாக்குவதே பாரம்பரிய அணுகுமுறை. குறிப்பாக, இந்திக்கு ஒரு மாதிரியும், தமிழுக்கு தனியாக ஒரு மாதிரியும் சொல்வது. பின்னர், நாம் முழுவதும் விரும்பும் வேறு எந்த மொழிக்கும் தனித்தனியாக சொல்லுங்கள். நீங்கள் நினைப்பதுபோல இது மிகவும் உழைப்பு மிகுந்த செயல்முறையாகும். ஏனென்றால், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மாதிரியை உருவாக்க மொழி சார்ந்த தரவு பெரும்பாலும் நம்மிடம் இல்லை” என்று இந்தியாவின் கூகுள் ஆய்வு விஞ்ஞானி டாக்டர் பார்த்தா தாலுக்தார் விளக்கினார்.

முரில் குறிப்பாக இந்திய மொழிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய சூழலில் நாம் காணும் நுணுக்கமான மற்றும் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக முரில் வடிவமக்கப்பட்டுள்ளது. முரில் என்பது பல மொழிகளைக் கையாளும் திறன் கொண்ட ஒரு மாதிரி ஆகும். மேலும், பயிற்சி மற்றும் கற்றல்களை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்ற முடியும். இது தற்போது 16 இந்திய மொழிகளையும், ஆங்கிலத்தையும் சேர்த்து மொத்தம் 17 மொழிகளில் உதவுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Google search to show results in relevant local language even if type in english characters

Next Story
அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020: ஸ்மார்ட்போன், லேப்டாப்பில் சலுகைகள்Amazon Christmas sale 2020 offers on xiomi samsung oneplus laptops smartphones tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com