/indian-express-tamil/media/media_files/QyYUUXDVrY659ojOWKvT.jpg)
கூகுள் சர்ச் உலகம் முழுவதும் பயன்படுத்தும் பிரபலமான சர்ச் என்ஜின் தளமாகும். சமீபத்தில் நடந்த கூகுள் I/O வருடாந்திர நிகழ்ச்சியில் கூகுளுக்கான புதிய அறிவுப்புகள் வெளியிடப்பட்டன. அதில், கூகுள் சர்ச் பக்கத்தில் புதிதாக 'வெப்' ஃபில்டர் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று கூறப்பட்டது. இந்த வெப் அம்சம் மூலம் பயனர்கள் எந்த வித ஏ.ஐ ப்ரீவியூகள் இல்லாமல் நேரடியாக தாங்கள் சர்ச் செய்த கேள்விக்கான வெப்சைட் லிங்க் மட்டும் பெற முடியும் என்று கூறியுள்ளது.
கூகுள் நிறுவப்பட்டபோது, சர்ச் என்ஜின் நிறுவனத்தின் விஷன் மிகவும் எளிமையானதாக இருந்தது. பயனர்கள் கூகுளின் தேடினால் அதற்கான தொடர்புடைய இணையதளங்களுடன் பதில் அளிக்க வேண்டும் என்று மட்டுமே இருந்தது.
ஆனால் இப்போது பதில்களுக்கு மேல் பல லேயர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஷாப்பிங் ரிசல்ட், டிஸ்பிளே நாளேஜ் பேனல் எனப் பல பதில்கள் வெப்சைட் பதில்களுக்கு மேல் வருகின்றன. இதனால் வெப் பேஜ் ரிசல்ட் கீழே சென்று விடுகிறது.
We’ve launched a new “Web” filter that shows only text-based links, just like you might filter to show other types of results, such as images or videos. The filter appears on the top of the results page alongside other filters or as part of the “More” option, rolling out today… pic.twitter.com/tIUy9LNCy5
— Google SearchLiaison (@searchliaison) May 14, 2024
இதற்கு தீர்வு காணும் வகையில், கூகுள் சர்ச் பக்கத்தில் புதிதாக 'வெப்' ஃபில்டர் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் டெக்ஸ்ட் பேசிட் வெப்சைட்களுக்கான லிங்க்கள் மட்டுமே இதில் காண்பிக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.