Advertisment

கூகுளில் போட்டோ சேமிக்க இடம் இல்லையா? சிம்பிளான 5 தீர்வுகள்

More space in Google Photos தேவையற்ற ஸ்க்ரீன் ஷாட்கள் அனைத்தையும் நீக்கி, அதிக இடத்தை உருவாக்கவும்.

author-image
WebDesk
New Update
5 ways to get more space in Google Photos Tamil News

5 ways to get more space in Google Photos

Google Tamil News; Ways to get more space in Google Photos : கூகுள் புகைப்படங்கள் உங்கள் கூகுள் கணக்கின் இலவச 15 ஜிபி சேமிப்பக திறனுக்கு எதிராக, “உயர்தர புகைப்படங்களை” சேர்க்கும் நாள் ஜூன் 1, 2021. கூகுள் புகைப்படங்களால், உங்கள் 15 ஜிபி இலவச சேமிப்பிடத்தை ஏற்கெனவே நிரப்பிவிட்டது என்றால், கூடுதல் இடங்களை உருவாக்க இங்கே சில வழிகள் உள்ளன.

Advertisment

வாட்ஸ்அப் அல்லது பிற ஃபோல்டர்களுக்கு புகைப்படங்களை பேக்-அப் எடுக்க வேண்டாம்

நீங்கள் வாட்ஸ்அப் குழுக்களின் ஒரு பகுதியாக இருந்தால், சீரற்ற படங்களை உள்ளடக்கிய குப்பைகளால் மூழ்கியிருக்க நேரிடும். இந்த படங்கள் தானாகவே கூகுள் புகைப்படங்களில் பேக்-அப் எடுக்கப்படுகின்றன. வாட்ஸ்அப்பிற்கான புகைப்பட பேக்-அப்பை முடக்குவதன் மூலம் நடக்கும் படிவத்தை நீங்கள் நிறுத்தலாம். இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சாதன கோப்புறைகளுக்கும் இதைச் செய்யலாம்.

உயர்தர புகைப்படங்களை நகர்த்தவும்

கூகுள் புகைப்படங்கள் எல்லா புகைப்படங்களையும் தானாகவே “அசல் அல்லது ஒரிஜினல்” அளவில் பதிவேற்றுகின்றன. இது அதிக இடத்தை எடுக்கும். “உயர்தர” புகைப்படங்களாக மாற்றுவதன் மூலம் அதனை மாற்றலாம். மேலும், ஜூன் 1 முதல், இந்த விருப்பம் உங்கள் மொத்த கணக்கு சேமிப்பிடத்திற்கும் எதிராகக் கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்கிரீன் ஷாட்களை நீக்கவும்

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக நிறைய ஸ்கிரீன் ஷாட்களை எடுத்துக்கொள்வோம். எல்லா ஸ்கிரீன் ஷாட்களையும் தனி ஃபைல்களில் காண்பிக்கும் அம்சம் கூகுள் புகைப்படங்கள் கொண்டுள்ளன. தேவையற்ற ஸ்க்ரீன் ஷாட்கள் அனைத்தையும் நீக்கி, அதிக இடத்தை உருவாக்கவும்.

பதிவேற்றுவதற்கு முன் புகைப்படங்களின் அளவை மாற்ற முயற்சி செய்யவும்

நிறையப் பேர் டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களிலிருந்து புகைப்படங்களை கூகுள் புகைப்படங்களுக்கு மாற்றுகிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், படங்களின் அளவை மாற்றி சேமிக்கவும். அவற்றை உண்மையான அளவில் பதிவேற்ற வேண்டாம். ஏனெனில் அதன் ஃபைல் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.

ஆதரிக்கப்படாத எல்லா வீடியோக்களையும் அகற்றவும்

கூகுள் புகைப்படங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரபலமான ஃபைல் வடிவமைப்பையும் ஆதரிக்கும் அதே வேளையில், ஆதரிக்கப்படாத சில ஃபைல்களும் இருக்கக்கூடும். கூகுள் புகைப்படங்களுடன், ஆதரிக்கப்படாத அனைத்து மீடியா ஃபைல்களும் பயன்பாட்டில் இடத்தைப் பெறுகின்றன. இந்த வீடியோக்கள் எவை என்பதைச் சரிபார்த்து, தேவையற்ற இடத்தை எடுத்துக்கொள்வதால் அவற்றை விரைவில் நீக்குங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment