Advertisment

குரோமில் வருகிறது ஜெமினி நானோ ஏ.ஐ வசதிகள்: எப்படி பயன்படுத்தலாம்?

'ஹெல்ப் மீ ரைட்' போன்ற ஜெமினி நானோ அம்சங்கள் குரோம் டெஸ்க்டாப் வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அம்சங்கள் பெரும்பாலான டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்களில் கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
GChrome.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் முடிவடைந்த கூகுள் I/O 2024 நிகழ்ச்சியில், உலகின் மிகவும் பிரபலமான ப்ரௌசர்  கூகுள் கிரோமின் (Chrome ) டெஸ்க்டாப் வெர்ஷனில் ஜெமினி நானோவைக் கொண்டு வருவதற்கான வேலையில் இருப்பதாக கூகுள் கூறியது.

Advertisment

ஜெமினி நானோ, 'ஹெல்ப் மீ ரைட்' போன்ற பல ஆன்-டிவைஸ் ஏ.ஐ அம்சங்களை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, இது பயனர்களுக்கு இ-மெயில் எழுதுவது, ரிப்போர்ட் போன்ற பல வகைகளில் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.  முன்னதாக இந்த அம்சம் கூகுள் வொர்க் ஸ்பேஸ் பயனர்கள் அதாவது  Docs and Slides-க்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமில்லாமல் ஜெமினி நானோ மூலம்  பயனர்கள்  product ரிவ்யூஸ், சமூக ஊடகப் பதிவு போன்றவற்றை எழுதப் பயன்படுத்தலாம். 

மைக்ரோசாப்ட் கடந்த ஆண்டு எட்ஜில் இதே போன்ற அம்சத்தை அறிமுகம் செய்தது, ஆனால் ஜெமினி நானோவைப் போலல்லாமல், Copilot பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவை. ஜெமினி நானோ ஆப்லைனில் கூட பயன்படுத்த முடியும்.

கூகுள் ஜெமினி நானோவைப் பயன்படுத்த இதே போன்று மற்ற இன்டர்நெட் ப்ரெளசர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளது. 

 

chrome
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment