காதலர் தின ஸ்பெஷல்: இந்தியாவில் மிகக் குறைந்த விலை கூகுள் ஸ்மார்ட்போன்!

கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.49,999 மற்றும் ரூ.61,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன

காதலர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம், தனது சமீபத்திய ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளது.

இந்த புதிய விலை குறைப்பின்படி, கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.49,999 மற்றும் ரூ.61,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது இரண்டு ஸ்மார்ட்போன்களின் உண்மை விலையில் இருந்து ரூ.12,000 வரை குறைவு ஆகும். முன்னதாக கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.61,999க்கும், பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.73,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஸ்மார்ட்போன்களின் விலையில் தள்ளுபடி வழங்குவதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கியுடன் இணைந்து பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களுக்கு முறையே ரூ.8,000 மற்றும் ரூ.10,000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிட்டிபேங்க் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோர் பிக்சல் 2 ஸ்மார்ட்போனினை ரூ.41,999க்கும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போனினை ரூ.51,999க்கு்ம வாங்கிட முடியும்.

இத்துடன் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கிகள் வழங்கும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. புதிய சலுகை பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2 மொபைலில், 5.0 இன்ச், 1920×1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், அட்ரினோ 540 GPU, 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, EIS, f/1.8 அப்ரேச்சர், 1.4μm பிக்சல், லேசர் + டூயல் பிக்சல் ஃபேஸ் டிடெக்ஷன், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 1.4μm, கைரேகை ஸ்கேனர், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 2700 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.

பிக்சல் 2 XL மொபைலில், 6.0 இன்ச், 2880×1440 பிக்சல் குவாட் எச்டி +POLED டிஸ்ப்ளே, 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், அட்ரினோ 540 GPU, 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி, மெமரியை கூடுதலாக நிட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், OIS, EIS, f/1.8 அப்ரேச்சர், 1.4μm பிக்சல், லேசர் + டூயல் பிக்சல் ஃபேஸ் டிடெக்ஷன், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4 அப்ரேச்சர், 1.4μm, கைரேகை ஸ்கேனர், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3520 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் கின்டா புளூ, ஜஸ்ட் பிளாக் மற்றும் கிளியர்லி ஒயிட் நிறங்களில் கிடைக்கிறது. அதேபோல், கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக், பிளாக் மற்றும் ஒயிட் நிறங்களில் கிடைக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close