Google Voice Access: கூகுள் வாய்ஸ் ஆக்ஸசை மேலும் எளிதாக்கும் ஒரு வழி!

Google Voice Access for Smartphones ; கூகுள் வாய்ஸில் உங்களது விருப்படி  எந்த மொழியில் வேண்டுமானலும் பேசிக் கொள்ளலாம். 

Google Voice Access for Smartphones ; கூகுள் வாய்ஸில் உங்களது விருப்படி  எந்த மொழியில் வேண்டுமானலும் பேசிக் கொள்ளலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google Voice Access

Google Voice Access

Google Voice Access:  உலகின் மிகப்பெரிய பயனாளர் பேஸ் கொண்ட கூகுள் நிறுவனம், தேடு பொறி சேவையிலும் முன்னணியில் இருக்கிறது. இணையதளத்தில் டெக்ஸ்ட் வடிவிலும், குரல் வழியிலும் கூகுள் தேடுபொறி மூலம் எந்த ஒரு தகவலையும் தேட முடியும்.

Advertisment

தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்தநிலையில், குரல் தேடல் சேவையை மேலும் 30 மொழிகளில் மேற்கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அவற்றில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி,  குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளும் அடங்கும்.

எழுத்துகள் மூலம் தேடுதலை விட குரல்வழி தேடல் மூன்று மடங்கு வேகமானது என்று கூறியுள்ள கூகுள், உலக அளவில் தேடுபொறியில் 20 சதவிகிதம் அளவுக்கு குரல்வழியே தேடப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

Google Voice Access for Android Smartphones : ஸ்மார்ட்ஃபோனில் செட்டிங்ஸை மாற்றுங்கள்!

Advertisment
Advertisements

உங்களது தொலைபேசியின் செட்டிங்ஸ்  பகுதிக்கு சென்று, அதில் லாங்குவேஜஸ் & இன்புட் என்ற பிரிவை தேர்ந்தெடுத்து அதில் ஜி போர்டு (Gboard) என்னும்  ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். அதில் வாய்ஸ் டைப்பிங் (Voice Typing) என்பதை தேர்ந்தெடுத்தவுடன் வரும் திரையில் லாங்குவேஜஸ் (Languages) என்ற தெரிவில் ஏற்கனவே தமிழை தவிர்த்து ஆங்கிலம் உள்பட எந்த மொழி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அதை நீக்கிவிட்டு தமிழை  தேர்ந்தெடுங்கள்.

வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட எல்லா செயலியிலும், உங்களது கீ போர்டில் உள்ள குரவல்வழி பதிவை (மைக் ஐகான்) தேர்ந்தெடுத்து உங்களது குரலை உடனடியாக தமிழ் எழுத்துக்களாக மாற்றுங்கள்.

இனிமேல்  கூகுள் வாய்ஸில் உங்களது விருப்படி  எந்த மொழியில் வேண்டுமானலும் பேசிக் கொள்ளலாம்.

Google

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: