ஏ.ஐ ( AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது
ChatGPT ஏ.ஐ அறிமுகம். கல்வி முதல் சிறு தொழில் வரை அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனமும் தனது தனித்துவமான AI சாட்போட் பார்டை (Bard)அறிமுகப்படுத்தியது. இது தற்போது 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இலவசமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல அம்சங்களையும் கூகுள் சேர்த்துள்ளது. மே 10-ம் தேதி டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் தனது பார்டு ஏ.ஐ-ஐ உலகிற்கு அறிமுகப்படுத்தியது. https://bard.google.com/ என்ற இணையத்தில் பார்டை இலவசமாக பயன்படுத்தலாம்.
பார்ட் அண்ட் தி பவர் ஆஃப் இன்டர்நெட்
சாட் ஜி.பி.டி பொதுவாக இணைய அணுகலுடன் வராது. இணையத்தைப் பயன்படுத்த, இணைய உலாவல் அம்சத்தை ஒருவர் அணுக வேண்டியிருக்கலாம். மாறாக, கூகிள் பார்ட் இணைய அணுகலுடன் வருகிறது. அதன் ஓபன் ஏ.ஐ எண்ணை விட இது ஒரு விளிம்பை அளிக்கிறது. இந்த சாட்போட் கேள்விகளுக்கு விரிவான மற்றும் தெளிவான தகவல்களை அளிக்கிறது.
ஸ்மார்ட் போனிலும் பார்டு பயன்படுத்தலாம்
ஸ்மார்ட் போனிலும் பார்டு ஏ,ஐ பயன்படுத்த முடியும் என்பது மிகவும் பெரிய நன்மையாக உள்ளது. காரணம் ChatGPT-ஐ போனில் பயன்படுத்த முடியாது. ChatGPT மொபைல் வெர்ஷன் கிடையாது. கூகுளிலும் சென்று பார்டு ஏ,ஐ-யை பயன்படுத்த முடியும்.
படங்களுடன் பதில்
ChatGPT திறம்பட செயலாற்றினாலும் படங்களுடன் பதில் வழங்குவதில் இருந்து குறைகிறது. OpenAI ஆனது Dall-E போன்ற படங்களை உருவாக்கும் திறன் கொண்ட பிற பண்புகளைக் கொண்டிருப்பதால் இது நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கூகுள் பார்ட் அதன் உரை பதிலில் படங்களை வழங்கும் திறன் கொண்டது. I/O நிகழ்வில் டெமோவின் போது கூகுள் இந்தத் திறனை சோதித்து காட்டியது. இந்த அம்சத்தை படிப்படியாக வெளியிட உள்ளது.
ஃபவர் ஆஃப் ஜிமெயில்
கூகுள் பார்டின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அது ஜிமெயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. ஜிமெயிலில் அதிக ஏ.ஐ பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் எளிதாக மற்றும் professional முறையில் ஜிமெயில் அனுப்ப முடியும். இது மிகவும் உதவிகரமான வசதியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.