இந்தியாவில் கூகுள் வாலட் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவில்லை என்றால் சில பயனர்கள் அதை டவுன்லோடு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். வாலட் ஆப்பில், டெபிட்/ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி டோக்கனைஸ் செய்து பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்து காண்டாக்ட்லெஸ் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இதை தவிர கூகுள் வாலட் ஒரு டிஜிட்டல் வாலட் செயலியாகவும் செயல்படுகிறது. இதில் கிப்ட் கார்ட்ஸ், ஜிம் மெம்பர்ஷிப், நிகழ்ச்சி டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் மற்றும் பலவற்றைச் சேமிக்க முடியும்.
Google Wallet என்பது இந்தியாவில் உள்ள Google Pay-ல் இருந்து வேறுபட்ட ஆப் ஆகும். கூகுள் பே UPI கட்டணச் சேவைகளை வழங்குகிறது. ஆனால், கூகுள் வாலட் ஆனது கிரெடிட்/டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களை மட்டும் செய்ய முடியும். மேலும் கூகுள் வாலட் நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (என்.எப்.சி) ஆதரவுடன் ஸ்மார்ட்போன்களில் மட்டும் பயன்படுத்தப்படும். TechCrunch-ன் அறிக்கையின்படி, கூகிள் இந்தியாவில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து இரண்டு சேவைகளையும் Google Pay மற்றும் Google Wallet ஆப்ஸ் இரண்டையும் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆப்பை, ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் ப்ளே ஸ்டோர் மூலம் கூகுள் வாலட் செயலியை டவுன்லோடு செய்து, தங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளை பாசஸ் ( passes) மூலம் சேர்க்கலாம். பயனர்கள் ஜிமெயிலில் இருந்து தானாகவே பாஸ்களைச் சேர்க்கலாம். அதாவது Finger print போன்ற பாதுகாப்பு ஆக்சஸ் வசதியாகும். இல்லையெனில் நீங்கள் புதிதாக இப்போது பயோமெட்ரிக் வெரிவிக்கேஷன் செய்யலாம். இதை செய்த பின் பரிவர்த்தனைகளை தொடங்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“