கூகுள் நிறுவனம் இந்தியாவில் கூகுள் வாலட் ஆப் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. கூகுள் வாலட் ஆப்-ல் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அதாவது உங்களுடைய கார்டு தகவல்கள், ஐ.டி, transit passes போன்றவற்றை ஸ்டோர் செய்து வைக்கலாம்.
கூகுள் பே- கூகுள் வாலட் வேறுபாடு என்ன?
கூகுள் வாலட் என்பது 'பாதுகாப்பான மற்றும் ப்ரைவேட் டிஜிட்டல் வாலட்' ஆகும். இதில் பயனர்கள் பயன்படுத்தும்
பேமெண்ட் கார்டுகள், passes, டிக்கெட்டுகள், ஐ.டிகளை விரைவாக அணுக அனுமதிக்கிறது.
அதேநேரம் கூகுள் பே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. எனினும் கூகுள் வாலட் அறிமுகம் செய்யப்பட்டதால் கூகுள் பே இருக்காது என்று இல்லை. கூகுள் பே தொடர்ந்து செயல்படும், அது தங்களின் முதன்மை பேமெண்ட் ஆப் என கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் வாலட் இந்தியாவில் நான்-பேமெண்ட் முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் வாலட் பயன்படுத்துவது எப்படி?
கூகுள் பிளே ஸ்டோர் சென்று கூகுள் வாலட் என டைப் செய்து செயலியை டவுன்லோடு செய்யவும்.அதன் பின் உங்கள் கார்டு தகவல்களை அதில் ஸ்டோர் செய்து வைக்கலாம். அதோடு கூகுள் சில முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கூறியுள்ளது. பயனர்கள் டிக்கெட்கள், பில் தகவல்களை ஸ்டோர் செய்து வைக் ஏதுவாக சில நிறுவனங்கள் PVR INOX, Flipkart, Air India, Shoppers Stop மற்றும் Ixigo போன்றவற்றுடன் இணைந்து செயல்பட உள்ளதாக கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“