இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக லாக்கின் (log in) செய்யப்படாமல் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Advertisment
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக லாக்கின் (log in) செய்யப்படாமல் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை இந்தாண்டு டிசம்பர் 31-ம் முதல் நீக்கத் தொடங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. அச்சுறுத்தல் மற்றும் அக்கவுண்ட்களைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இதை செய்வதாக நிறுவனம் கூறியுள்ளது.
கூகுள் தயாரிப்பு நிர்வாகத்திற்கான துணைத் தலைவர் ரூத் கிரிசெலி கூறுகையில், கூகுளில் பல அக்கவுண்ட்கள் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருக்கும். மேலும், இந்த பழைய அக்கவுண்ட்களில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. Two factor authentication அம்சம் இல்லை. இதனால் பயனரின் தனிப்பட்ட தரவுகளுக்கு ஆபத்து ஏற்படும்.
இருப்பினும் கூகுள் நிறுவனம் இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பயனருக்கு பல்வேறு முறை இ-மெயில் மூலம் தெரியப்படுத்தும். இன்-ஆக்டிவ் அக்கவுண்ட், நீங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு என பல்வேறு முறை இ-மெயில் அனுப்பும். அப்போது நீங்கள் அக்கவுண்டை ஆக்டிவேட் செய்யலாம்.
எப்படி அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்வது?
இது மிகவும் எளிது. இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்டை லாக்கின் செய்து அந்த இ-மெயில் இருந்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு மெயில் அனுப்பலாம். இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்டை லாக்கின் செய்து அதைப் பயன்படுத்தி கூகுள் ட்ரைவ், போட்டோஸ், யூடியூப் போன்றவற்றில் பயன்படுத்தலாம். அவ்வளவு தான் இப்போது உங்கள் அக்கவுண்ட் இன்-ஆக்டிவ் என காட்டப்படாது.
இதை எல்லாம் செய்யத் தவறும்பட்சத்தில் உங்கள் இன்-ஆக்டிவ் கூகுள் அக்கவுண்ட் நிரந்தரமாக டெலிட் செய்யப்படும். அந்த அக்கவுண்ட்டில் உள்ள இ-மெயில், கூகுள் போட்டோஸ், யூடியூப் வீடியோ என எதுவும் பயன்படுத்த முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“