Google wont offer free uploads from June 1, 2021 Tech Tamil News : கூகுள் அதன் அன்லிமிடெட் உயர்தர சேமிப்பு பாலிசியை மாற்றத் தயாராக உள்ளது. கூகுள் புகைப்படங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஜூன் 1, 2021 முதல் இலவச பதிவேற்றங்கள் கிடைக்காது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல், உயர்தர படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்றினால், அவை கூகுள் சேமிப்பக வரம்பில் கணக்கிடப்படும். கடந்த புதன்கிழமை ஓர் பிலாக் போஸ்ட்டில் (Blog Post), “நீங்கள் இன்னும் அதிகமான நியாபகங்களை வரவேற்கலாம்” என்று கூறியிருக்கிறது.
ஜூன் 1, 2021 முதல் இலவச பதிவேற்றங்கள் இல்லை என்றால் என்ன?
ஜிமெயில், டிரைவ் மற்றும் புகைப்படங்களுக்காக கூகுள் மொத்தம் 15 ஜிபி இலவச சேமிப்பிடத்தை வழங்குகிறது. வருகிற ஜூன் 1, 2021 முதல் எல்லா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் ஒவ்வொரு கூகுள் கணக்கோடு வரும் 15 ஜிபி இலவச சேமிப்பிடத்திற்கு கணக்கிடப்படும். எனவே, வழங்கப்பட்ட சேமிப்பக இடம் நிரம்பியிருந்தால், அதிக சேமிப்பிடத்தைப் பெற நீங்கள் கூகுள் ஒன் சந்தாவை பெறவேண்டும். தற்போதுள்ள உயர்தர உள்ளடக்கம் அனைத்தும் சேமிப்பக ஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஜூன் 1, 2021-க்கு முன்னர் புதிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் உயர் தரத்தில் பதிவேற்றினால், அவை உங்கள் கூகுள் கணக்கு சேமிப்பகத்திற்கு கணக்கிடப்படாது.
தற்போதைய கூகுள் சேமிப்புக் கொள்கை என்ன?
தற்போது, கூகுள் “உயர் தரமான” புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான அன்லிமிடெட் பேக்அப் விருப்பத்தை வழங்குகிறது. இருப்பினும், படங்கள் தானாகவே 16MP ஆகவும், வீடியோக்கள் உயர் வரையறைக்குவும் சுருக்கப்படுகின்றன. மேலும், இதில் எக்ஸ்பிரஸ் விருப்பமும் உள்ளது. அதாவது இலவச வரம்பற்ற சேமிப்பிடத்தை அளிக்கிறது. ஆனால், புகைப்படங்கள் 3MP ஆகவும் மற்றும் வீடியோக்களை நிலையான வரையறைக்கும் சுருக்குகிறது. அசல் குவாலிட்டி விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்திருந்தால், புதிய மாற்றங்கள் பாதிக்காது. புகைப்படங்கள் பயன்பாட்டில் உள்ள சேமிப்பகத்திற்கு எதிராக எல்லா “அசல் தரம்” புகைப்படங்களையும் கூகுள் ஏற்கெனவே கணக்கிடும். கூகுள் பிக்சல் தொலைபேசியின் உரிமையாளராக நீங்கள் இருந்தால், உயர் தரமான அமைப்பில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இலவசமாக பதிவேற்ற கூகுள் உங்களை அனுமதிக்கும்.
சேமிப்பக கொள்கையை கூகுள் ஏன் மாற்றுகிறது?
இலவச காப்புப்பிரதிகள் நிறுவனத்திற்கு பெரிய செலவை ஏற்படுத்துவதால் கொள்கையை மாற்ற வேண்டியுள்ளது என கூகுள் புகைப்படங்கள் தயாரிப்பு முன்னணி தலைவர் டேவிட் லிப் ட்விட்டரில் விளக்கினார். ஆன்லைன் சேவையின் “முதன்மை மதிப்பை” ஏற்றுக்கொள்வதோடு, இலவச சேவையை வழங்குவதற்கான “முதன்மை செலவை சீரமைக்க” இது அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கூகுள் ஒன் சந்தாவின் விலை என்ன?
கூகுள் ஒன்னின் அடிப்படை சந்தா உங்களுக்கு 100 ஜிபி சேமிப்பு இடத்தை மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டு அடிப்படையில் ரூ.1,300-க்கு வழங்குகிறது. இதைச் செலுத்துவதன் மூலம், நீங்கள் நிறைய சேமிப்பிட இடத்தைப் பெறுவீர்கள். அதை உங்கள் குடும்பத்தினருடன் கூட பகிர்ந்து கொள்ளலாம். 200 ஜிபி சேமிப்பு இடத்திற்கு, மாதம் ரூ.210 அல்லது ஆண்டுக்கு ரூ.2,100 செலுத்த வேண்டும். 2TB-க்கு, இந்தியாவில் கூகுள் ஒன்னின் விலை மாதத்திற்கு ரூ.650 மற்றும் ஆண்டுக்கு ரூ.6,500 ஆகிறது. 10TB-க்கு மாதம் ரூ.3,250.
நீங்கள் தீர்மானிக்க 6 மாதங்கள் உள்ளன
இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்பதால், நீங்கள் தீர்மானிக்க நிறைய நேரம் இருக்கிறது. நீங்கள் கூகுளின் இந்த புதிய கொள்கையை பின்பற்றலாம் அல்லது சிறந்த ஒப்பந்தத்துடன் வேறு எந்த க்லவுட் சேமிப்பகத்திற்கும் மாறலாம். “இந்த மாற்றம் ஜூன் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்தவுடன், 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பயனர்கள் இலவச 15 ஜிபி சேமிப்பகத்துடன் சுமார் மூன்று வருட மதிப்புள்ள மெமரி இடத்தை பெற முடியும்” என கூகுள் கூறுகிறது. ஜூன் 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயலற்ற கணக்குகளின் உள்ளடக்கத்தையும் கூகுள் நீக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Google wont offer free uploads from june 1 2021 tech tamil news
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை