Advertisment

இந்தியா அதிரடி நடவடிக்கை: ஸ்மார்ட் போன்களில் மாற்றம் செய்த கூகுள்.. இந்த 4 ஆப்ஷனை நோட் செய்யுங்க!

சி.சி.ஐ உத்தரவுக்கு பிறகு கூகுள் தனது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
இந்தியா அதிரடி நடவடிக்கை: ஸ்மார்ட் போன்களில் மாற்றம் செய்த கூகுள்.. இந்த 4 ஆப்ஷனை நோட் செய்யுங்க!

நீண்ட காலமாக, உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதற்கான விதிகளை அமைக்கும் ஒரே அதிகாரத்தை கூகுள் கொண்டிருந்தது. பயனர்கள் மட்டுமின்றி, ஆப்ஸ் டெவலப்பர்களும் கூட கூகுளின் விதியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. கடந்த வாரம் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின்

Antitrust order உத்தரவுக்குப் பிறகு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. கூகுள் புதன்கிழமை இந்தியாவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான அதன் விதிகளில் மாற்றங்களைச் செய்தது. குறிப்பாக இந்த 4 அம்சங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது பயனர்களை வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Advertisment

ஆண்ட்ராய்டு போன்களில் default search engine தேர்வு செய்வதற்கான சுதந்திரம்

ஆண்ட்ராய்டு போன்களில் default search engine தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. அதாவது பயனர்கள் தாங்கள் விரும்புகிற search engine-யை தேர்வு செய்யலாம். ஆனால் அதை அவர்கள் போன் செட்டிங்ஸ் மெனுவில் இருந்து விருப்பத்தைத் தேட வேண்டும்.

publive-image

இந்த புதிய அம்சம் ​​Bing அல்லது DuckDuckGo போன்ற search engine ஆப்ஷகளை தேர்வு செய்ய வழிவகுக்கும். ஆனால் இந்தியாவில் இதை கூகுள் செய்யுமா என்பது குறித்து கூறவில்லை. அதே நேரத்தில் ஐரோப்பாவில் உள்ள Ecosia மற்றும் Qwant போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை. கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் நிறுவனங்கள் இல்லை என்பது மிக முக்கியமானது.

ஃபோர்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறுபாடுகளுக்கு நீட்டிக்கப்பட்ட ஆதரவு

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இப்போது ஆண்ட்ராய்டின் அங்கீகரிக்கப்பட்ட, ஃபோர்க் செய்யப்பட்ட பதிப்புகளை உருவாக்குவதற்கான விருப்பத்தைப் பெற்றுள்ளனர் - இது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில் அதிக போட்டிக்கு வழிவகுக்கும் ஒரு பெரிய மாற்றம் ஆகும். இது உள்நாட்டு தயாரிப்பான பார் ஓ.எஸ் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. பார் ஓ.எஸ் என்பது உள்நாட்டு தயாரிப்பு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். ஐஐடி-மெட்ராஸ் குழுவினரால் உருவாக்கப்பட்டது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் இப்போது தனிப்பட்ட கூகுள் பயன்பாடுகளுக்கு உரிமம் வழங்கலாம்

இந்த ஆப்ஷன் இந்தியாவில் உள்ள ஃபோன் உற்பத்தியாளர்கள் இப்போது தனிப்பட்ட அடிப்படையில் கூகுள் ஆப்ஸுக்கு உரிமம் வழங்க முடியும். நாட்டில் விற்கப்படும் எந்த ஸ்மார்ட்போனிலும் ஜிமெயில், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றை நிறுவுவதற்கான உரிமமான கூகுள் மொபைல் சேவைகளை (ஜிஎம்எஸ்) தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் கொள்கையிலிருந்து இது ஒரு முக்கிய விலக்காகும். ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் தங்கள் சாதனங்களில் முன்பே நிறுவுவதற்கு "தனிப்பட்ட Google பயன்பாடுகளுக்கு உரிமம்" வழங்குவதாக கூகுள் கூறுகிறது.

(எ.கா) ஜியோமி குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த விரும்பினால், அது கூகுள் Search பயன்பாட்டை மட்டும் வைத்து மற்றவற்றை தவிர்க்கலாம். இது போனில் விலையை பெருமளவு குறைக்க உதவுகிறது. GMS இன் கூடுதல் விலை காரணமாக இதற்கு முன் சாத்தியமில்லாத 3,000 ரூபாய்க்கு குறைவான விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட நிறுவனங்களை இது அனுமதிக்கும். இது இந்தியாவில் மிகவும் மலிவு விலை போன்களுக்கான புதிய சந்தையைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைட் லோடிங் ஆப் ஆப்ஸ் மற்றும் மூன்றாம் தரப்பு பில்லிங்

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லாத பிற தளங்களிலிருந்தும் ஆப்ஸை இன்ஸ்டால் செய்ய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அனுமதி உள்ளது. ஆனால் இப்போது, ​​பயனர்கள் sideload செய்த ஆப்களையும் ஆட்டோமெடிக்காக அப்டேட் செய்ய முடியும். இந்த புதிய ஆப்ஷன் மூலம் மூன்றாம் தரப்பு ஆப் ஆட்டோமெடிக் அப்டேட் தொடர்பான தகவலை அனுப்பும். தற்போது கூகுள் ப்ளே ஸ்டோர் வழங்குவது போல் அப்டேட் வழங்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த அம்சத்தை இயக்கும் முன் மூன்றாம் தரப்பு ஆப்கள் ஆட்டோமெடிக் அப்டேட் குறித்து கூகுள் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பும். அந்த அம்சத்தின் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து எச்சரிக்கை மெசேஜ் அனுப்பும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Android Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment