ட்விட்டர் முதல் மெட்டா வரை, முன்னணி சமூக ஊடக தளங்கள் அதன் சந்தாதாரர்களுக்கு ப்ளூ டிக் வசதி வழங்கி வருகிறது. இதற்கு நிறுவனத்திடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாத சந்தா, வருட சந்தா அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ப்ளூ டிக் என்பது தலைவர்கள், பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை அடையாளம் காணப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில், கூகுள் நிறுவனம் பெரும் பயனர்களைக் கொண்ட ஜி மெயில் அம்சத்திற்கு ப்ளூ டிக் வசதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. BIMI (Brand Indicators for Message Identification) இடம் ஆவணங்களைச் சரிபார்த்து பயனர்கள் ப்ளூ டிக் வசதி பெறலாம் என அறிவித்துள்ளது.
கூகுள் அறிக்கை படி, ப்ளூ டிக் வசதி பெற பயனர்கள் BIMI இயங்குதளத்தில் தங்கள் பிராண்ட் லோகோவைச் சரிபார்க்க வேண்டும். இந்த புதிய அம்சம் மூலம் போலி நபர்களை கண்டறிய முடியும் எனக் கூறியுள்ளது.
இந்த அம்சம் இன்னும் 3 நாட்களில் வணிக பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். Google Workspace வாடிக்கையாளர்கள், வணிக பயனர்களுக்கு ப்ளூ டிக் வசதி வழங்கப்படுகிறது.
இதை எவ்வாறு பெறுவது?
ஜி மெயில் ப்ளூ டிக் பெற முதலில் BIMI-ல் கணக்கு தொடங்க வேண்டும். பின் லோகோவைச் சரிபார்க்க வேண்டும். அதற்கு டொமைன் தகவல் தேவைப்படும். உங்கள் பிராண்ட் லோகோவை SVG பார்மெட்டில் அப்லோடு செய்து அதை வர்த்தக முத்திரையாகப் பதிவு செய்ய வேண்டும். கடைசியாக VMC (verified mark certificate) அப்ளை செய்து ப்ளூ டிக் வசதியை பெறுங்கள். உங்கள் பிராண்ட் பெயர் பின்புறம் ப்ளூ டிக் வசதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“