கூகுள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகுள் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பயனர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோசுக்கு எளிதாக ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோஸ் ஷேர் செய்யும் வகையில் நியர்பை ஷேர் (Nearby Share) என்ற செயலி அறிமுகப்படுத்த உள்ளது. ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோசுக்கும், விண்டோஸ்ஸில் இருந்து ஆண்ட்ராய்டு போனிற்கும் என மாற்றி தங்கள் ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோஸ் ஷேர் செய்து கொள்ளலாம்.
தற்போது வரை பலரும் யு.எஸ்.பி கேபிள் மூலம் தான் பைல்ஸ், போட்டோஸ் ஷேர் செய்து வருகிறோம். கூகுளின் இந்த சிம்பிளான வசதி பெரிதும் உதவியாக மாற உள்ளது. இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது
பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
எப்படி பயன்படுத்துவது?
- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போன் மற்றும் லேப்டாப், கணினியில் ஒரே கூகுள் அக்கவுண்டை பயன்படுத்தி Sign in செய்ய வேண்டும்.
- அடுத்து ஆண்ட்ராய்டின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று Nearby Share எனச் search செய்யவும். அதில் வரும் முதல் ஆப்ஷனை கிளிக் செய்து get started எனக் கொடுக்கவும்.
- இதை செயல்பாட்டை பயன்படுத்த உங்கள் போன், லேப்டாப்பில் Bluetooth மற்றும் வை-பை வசதி தேவை.
- இப்போது ஆப் ஓபன் செய்து ஷேர் செய்ய வேண்டி ஃபைல்களை செலக்ட் செய்து drag செய்து இந்த ஆப்பில் போடவும். அடுத்து பைல் மேல் வலப்புறத்தில் கிளிக் செய்தால் ‘Send with Nearby Share’என்ற ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து அனுப்பலாம். அவ்வளவு தான் தற்போது உங்களுக்கு பைல் ஷேர் செய்யப்படும்.