/tamil-ie/media/media_files/uploads/2022/09/India-porn-ban.jpg)
ஆபாச படங்களை பார்ப்பது மேற்கத்திய நாடுகளில் ஒரு சாதாரண நிகழ்வாக உள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி 67 ஆபாச இணையதளத்தை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமல்படுத்தியது. இந்நிலையில் இந்த சட்டத்தின்படி விதி மீறலில் ஈடுபட்டு வரும் வாட் ஆப் குரூப், இணையதளம், யுடியூப் ஆகியவற்றை முடக்க முடியும். இந்நிலையில் தற்போது 67 ஆபாச இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, புனே நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 63 இணையதளங்களையும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 4 ஆபாச இணையதளத்தையும் அரசு முடக்கி உள்ளது. இந்த இணையதளங்கள் பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விதிக்கும் விதமாகவும், ஆபாசத்தை பரப்பும் விதமாகவும் செயல்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.