உங்க ஸ்மார்ட்போன் தொலைஞ்சு போச்சா? இனி கண்டுபிடிப்பது மிக சுலபம்!

CEIR IMEI database to track stolen smartphone : சிறப்பு திட்டங்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, எகிப்து, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

By: Updated: June 21, 2019, 08:14:09 AM

Pranav Mukul

Government is ready to roll out CEIR IMEI database to track your stolen smartphone : ஸ்மார்ட்போன்களின் இன்டஸ்ட்ரி எவ்வளவு தூரம் வளர்கின்றதோ, அதே போன்று தான் ஸ்மார்ட்போன்களின் திருட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் செண்ட்ரல் எக்யூப்மெண்ட் ஐடண்ட்டி ரெஜிஸ்டர் என்ற டேட்டாபேஸை ஐ.எம்.இ.ஐ (IMEI) நம்பர் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.  இந்த டேட்டாபேஸ் முறையாக முழுவதும் முடிக்கப்பட்ட பின்னர், போன்களை தொலைத்தவர்கள், தொலைத்தொடர்பு அமைச்சரகத்தின் உதவியால் விரைவில் திரும்பி பெற்றுக் கொள்ள இயலும்.

தொலைத்தொடர்பு அமைச்சரகம் உங்கள் தொலைந்த போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை உடனடியாக ப்ளாக் செய்து விடும். அப்படி செய்துவிட்டால் உங்கள் போனை எந்த நெட்வொர்க்கிலும் இயக்க இயலாது.  மார்ச் மாதம், 2019 இறுதியில் இந்தியாவில் சுமார் 1.16 பில்லியன் மக்கள் வயர்லெஸ் தொலைத்தொடர்பினை பெற்றுள்ளனர்.

2017ம் ஆண்டு ஜூலை மாதம், இதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொண்டது தொலைத்தொடர்பு அமைச்சரகம். ”நாளுக்கு நாள் போன்களை திருடிச்செல்வது, போலியான போன்களை தயாரிப்பது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது இந்தியா. போன் என்பதை தனிப்பட்ட தேவைக்காகவும், விற்று பணம் பெறலாம் என்ற எண்ணத்துடனும் மட்டுமே திருப்படுவதில்லை. ஆனால் திருடப்பட்ட போனில் இருந்து பெறப்படும் தகவல்களை பயன்படுத்தி அந்த போனின் உரிமையாளர்களை மிரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

போலியான போன் மட்டுமல்ல தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு தலைவலியாக அமைந்துள்ளது பொய்யான ஐ.எம்.இ.ஐ எண்கள் என்றும் அன்று குறிப்பிட்டு பேசியது தொலைத்தொடர்பு அமைச்சரகம்.

தேசிய தொலைத்தொடர்பு கொள்கை 2012ன் கீழ், அலைபேசி எண்களின் ஐ.எம்.இ.ஐ எண்களை பதிவு செய்ய துவங்கியது தலைத் தொடர்பு நிறுவனம். இந்த மிகப்பெரிய பொறுப்பில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் முக்கிய பங்கு வகித்தது. 2019-20ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த ப்ரோஜெக்டில் இந்தியாவில் உள்ள போன்கள் எல்லாம் மூன்று நிறங்களுக்கு கீழ் வரும். வெள்ளை நிறத்தின் கீழ் வரும் அலைபேசிகள் உபயோகிக்க எந்த தடையும் இல்லை. கருப்பு நிறத்தின் கீழ் வரும் போன்கள், தொலைந்தவை அல்லது திருடு போனவை என்று புகார் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள். கிரே நிறத்தின் கீழ் வரும் போன்கள் பயன்படுத்த எந்த தடையும் இல்லை. ஆனால் அதன் உண்மைத் தன்மை மற்றும் பயன்பாடு ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கும்.

மொபைல் ஆப்பரேட்டர்கள், சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், சாஃப்ட்வேர் மற்றும் இண்டெர்நெட் கம்பனிகள், மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடங்கிய ஜி.எஸ்.எம் அசோசியேசன் (GSMA) உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இந்த திட்டம் முழுவடிவம் பெற்றது. இது போன்ற சிறப்பு திட்டங்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, எகிப்து, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

மேலும் படிக்க : ரெவால்ட் ஆர்.வி. 400 : ஆன் – போர்ட் சார்ஜருடன் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் பைக்… நடுவழியில் பேட்டரி தீர்ந்தாலும் இனி கவலை இல்லை

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Government is ready to roll out ceir imei database to track stolen smartphone

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X