scorecardresearch

கம்ப்யூட்டர், லேப்டாப்பில் இதை பயன்படுத்துகிறீர்களா?… உடனே அப்டேட் செய்யுங்க.. அரசு எச்சரிக்கை!

உங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப்பில் விண்டோஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு பயனர்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கம்ப்யூட்டர், லேப்டாப்பில் இதை பயன்படுத்துகிறீர்களா?… உடனே அப்டேட் செய்யுங்க.. அரசு எச்சரிக்கை!

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Meity) கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) (The Indian Computer Emergency Response Team)(CERT-In), அனைத்து விண்டோஸ் பயனாளர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி விண்டோஸில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது எனவே, பயனர்கள் உடனடியாக தங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப்பை சமீபத்தில் வெர்ஷனுக்கு அப்டேட் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் விண்டோஸின் சில வெர்ஷன்களில் வைரஸ், மால்வேர் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் Windows Defender அம்சத்தில் பாதுகாப்புக் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் பயனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்ன?

CERT-In மற்றும் Microsoft தொழில்நுட்ப குழு கூறுகையில், இப்போது விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை உயர் பாதுகாப்பு எச்சரிக்கை ஆகும் எனத் தெரிவித்துள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாட்டால் ஹேக்கர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கணினியை எளிதாக ஹேக் செய்து பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளது. Windows Defender’s Credential Guard அம்சத்தில் பக் (bug) ஏற்பட்டுள்ளது முக்கிய காரணமாகும்.

டொமைன் பயன்படுத்தும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு இந்த பக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வகை பாதிப்பு 2021ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 1.5 பில்லியன் விண்டோஸ்
பயனர்கள் உள்ளனர். தற்போது, ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு 43 மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் வெர்ஷகளில் பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள விண்டோஸ் வெர்ஷன்

Windows 11 for ARM64-based Systems

Windows 11 for x64-based Systems

Windows 10 Version 1607 for x64-based Systems

Windows 10 Version 1607 for 32-bit Systems

Windows 10 for x64-based Systems

Windows 10 for 32-bit Systems

Windows 10 Version 21H2 for x64-based Systems

Windows 10 Version 21H2 for ARM64-based Systems

Windows 10 Version 21H2 for 32-bit Systems

Windows 10 Version 20H2 for ARM64-based Systems

Windows 10 Version 20H2 for 32-bit Systems

Windows 10 Version 20H2 for x64-based Systems

Windows 10 Version 21H1 for 32-bit Systems

Windows 10 Version 21H1 for ARM64-based Systems

Windows 10 Version 21H1 for x64-based Systems

Windows 10 Version 1809 for ARM64-based Systems

Windows 10 Version 1809 for x64-based Systems

Windows 10 Version 1809 for 32-bit Systems

Windows Server 2022 (Server Core installation)

Windows Server 2022

Windows Server 2019 (Server Core installation)

Windows Server 2019

Windows Server 2016 (Server Core installation)

Windows Server 2016

Windows Server, version 20H2 (Server Core installation)

இந்த வெர்ஷன் விண்டோஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உடனே அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் அப்டேட் செய்வது

பயனர்கள் தங்களது விண்டோஸ் அப்டேட் செய்ய settings மெனுவிற்கு சென்று சமீபத்திய விண்டோஸ் வெர்ஷன் அப்டேட் செய்ய வேண்டும். auto-update option தானாகவே அப்டேட் செய்யும் ஆப்ஷன் ஆன் செய்து வைத்திருந்தீர்கள் என்றால் தானாகவே சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் ஆகிவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Government issues high security warning for windows asks users to update device immediately