இந்திய அரசு வெளியிட்ட கொரோனா வைரஸ் ஆப் – உங்கள் மொபைலில் உள்ளதா?

Corona Kavach: கோவிட் -19 குறித்த தகவல்களை வழங்க மற்றும் அது தொடர்பான தகவல்களை சேகரிக்க Corona Kavach ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் பயனர்களுடைய தரவுகளை கண்காணித்து அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் யாரையாவது கடந்து சென்றுள்ளனரா என்பது குறித்து…

By: Updated: March 31, 2020, 04:21:15 PM

Corona Virus APP: Corona Kavach எனும் கொரோனா வைரஸை கண்காணிக்கும் ஆப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது இது அனைத்து ஆண்ட்ராய்ட் கைபேசிகளுக்கு கிடைக்கிறது.


‘Corona Kavach.’ என்ற கொரோனா வைரஸ் இடர் கண்காணிப்பு (risk-tracking) ஆப்பை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த ஆப்பை உருவாக்கியுள்ளன. இந்த ஆப் ஒரு தனிநபருடைய இருப்பிடத்தை வைத்து அவர் அதிக ஆபத்து நிறைந்த புவியியல் மண்டலத்தில் (high risk geographical zone) உள்ளாரா இல்லையா என்பதை மதிப்பீடு செய்யும். இந்த ஆப் தற்போது ஆண்ட்ராய்ட் கைபேசிகளுக்கு பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டேரில் கிடைக்கிறது.

தள்ளாடும் வாட்ஸ்அப் சர்வர், இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்

பொதுமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள்களை வழங்க மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தரவுகள் பகுப்பாய்வு நடத்த பயன்படுத்தப்படுவதோடு இந்தியாவில் கோவிட் -19 பாதித்த நோயாளிகள் குறித்த தகவல்களையும் வழங்கும். உங்களுடைய சுவாச திறனை கண்காணிக்க மற்றும் சுய பரிசோதனைக்காக ஒரு கணக்கெடுப்பு படிவமும் கூடுதல் அம்சங்களாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன என் இந்த ஆப்பின் விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவிட் -19 குறித்த தகவல்களை வழங்க மற்றும் அது தொடர்பான தகவல்களை சேகரிக்க Corona Kavach ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் பயனர்களுடைய தரவுகளை கண்காணித்து அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் யாரையாவது கடந்து சென்றுள்ளனரா என்பது குறித்து எச்சரிக்கும்.

பயனர்களை அவர்களுடைய கைபேசி எண்ணை பயன்படுத்தி sign in செய்ய செய்து அவர்களுடைய கைபேசியிலுள்ள GPS ஐ பயன்படுத்தி அவர்களுடைய நகர்தலைக் கண்காணிக்கிறது. இது பயனர்களிடையே தனிநபர் உரிமையை பாதிக்குமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தினாலும், பயனர்களுடைய அடையாளம் அரசு அல்லது ஏதாவது மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் அல்லது server உட்பட யாரிடமும் தெரிவிக்கப்படாது என்று ஆப்பின் விளக்க குறிப்பு பரிந்துரைக்கிறது.

கோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் ‘ஆப்பிள்’ கருவி – பயன்படுத்துவது எப்படி?

பயனர் கோவிட் -19 பாதித்த carrier ஓடு தொடர்பில் இருந்தாரா இல்லையா என்பதை இந்த ஆப் வண்ண குறியீடுகள் பயன்படுத்தி கண்டுபிடிக்கும்.

இதற்கு இந்த ஆப் நாட்டிலுள்ள அனைத்து கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுடைய விவரங்களையும் பயன்படுத்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Government of india launches coronavirus tracking app corona kavach android phones

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X