தமிழக அரசு, மத்திய அரசு மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஆவணங்களை வழங்குகிறது. அது அடையாள அட்டையாக பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன. அதே போல் கல்வி நிறுவனங்களிலும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக 10,12-ம் வகுப்பு படித்தற்கான சான்றிதழ், மாற்று சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். அதே போல் கல்லூரி படிப்பிலும் சான்றிதழ் வழங்கப்படும். வங்கி பரிவர்த்தனைக்கு பயன்படும் வரிமான வரிச் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதே போல் ஓ.பி.சி சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இது போன்ற முக்கிய ஆவணங்கள் தவறுதலாக தொலைத்து விட்டால் அதை
இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த மாதிரியான அரசு வழங்கும் சான்றிதழ்களை இ-பெட்டகம் என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம். இந்த இணையத்திற்கு சென்று https://epettagam.tn.gov.in பெறலாம்.
இணையதளத்தில் சென்று ஆதார் எண் கொடுத்தால் உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு ஓ.டி.பி வரும். அதை உள்ளிட்டு இணையத்திற்கு செல்லவும். அங்கு உங்களுக்கு தேவையான ஆவணங்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இப்போது இதில் குறிப்பிட்ட சான்றிதழ்கள் மட்டும வழங்கப்படுகிறது. விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அரசு கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“