மின்னஞ்சல் சேவைகள் மற்றும் பிற இணைய அடிப்படையிலான அலுவலக தயாரிப்புகளை கையாள, சென்னையை தளமாகக் கொண்ட வணிக தீர்வுகள் வழங்குநரான Zoho-ஐ மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
அரசு டிஜிட்டல் சேவைகளை கையாள தனியார் ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக மார்ச் 17ஆம் தேதி அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையான தேசிய தகவல் மையம் (NIC) தற்போது கையாளும் சில பொறுப்புகளை மூன்றாம் தரப்பினருடன் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (டிஐசி) வெளியிட்ட பொது டெண்டருக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 29 தேதியிட்ட கொள்முதலுக்கான உள்நோக்கக் கடிதத்தின்படி, போட்டியிடும் ஏலங்களின் அடிப்படையில் Zoho பட்டியலிடப்பட்டது.
இதன்படி நிறுவனம் குறைந்தபட்சம் 20,00,000 பயனர்கள் முதல் 50,00,000 வரை அளவிடக்கூடிய பாதுகாப்பான மின்னஞ்சல் தீர்வை வழங்க வேண்டும்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், “இணையத் தீர்வுகள் மற்றும் இணையப் பாதுகாப்பை சிறப்பாகப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அந்த வகையில், 10 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய நிலையான மின்னஞ்சலுக்கு ஒரு பயனருக்கு மாதந்தோறும் ₹170 (வரிகள் இல்லாமல்) சேவைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித்திறன் கருவிகளுக்கு, வரி இல்லாமல் ஒரு பயனருக்கு மாதந்தோறும் ₹50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“