Advertisment

Graphene Batteries : எதிர்கால பேட்டரிகள் இதை நம்பித்தான்... அசத்த இருக்கும் சாம்சங்

Samsung batteries technology : வருகின்ற 2020 அல்லது 2021ம் ஆண்டு முதல் இந்த  ஸ்மார்ட்போன்களில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
graphene vs lithium battery Samsung batteries technology, graphene vs lithium battery, samsung new technology, graphene balls,

graphene vs lithium battery

graphene vs lithium battery Samsung batteries technology : மாற்றங்கள் தான் இந்த பூமியை சுழல வைக்கிறது. அறிவியல் மற்றும் விஞ்ஞானம் இல்லாமல் மாற்றங்கள் என்பது சாத்தியமே அற்றது. சில வருடங்களுக்கு முன்பே கார்பன் அணுக்களின் சேர்மானமான கிராஃபைனில் இருந்து பேட்டரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று பேச்சு ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.

Advertisment

graphene vs lithium battery Samsung batteries technology  : கிராஃபைன் பேட்டரிகளின் அட்வாண்டேஜ்

இதற்கான காரணம், தற்போது செல்போன்கள்  மற்றும் லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் முழுக்க முழுக்க லித்தியம் மற்றும் ஐயன் மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நாம் அதை சார்ஜ் செய்தாலோ அல்லது அந்த டிவைஸ்களை உபயோகம் செய்தாலோ உடனே சூடாகிவிடுகிறது. மேலும் சார்ஜ் ஆவதற்கே நான்கு மணி நேரம் முழுமையாக தேவைப்படுகிறது. இதற்கு மாற்றாகவே கிராஃபைன் பயன்பாடு குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர்.

மிகவும் இலகும் தன்மை கொண்டது. ஆனாலும் அது மிகவும் கடினமானது. கார்பன் மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பொருள் எஃக்கினை விட ஏன் வைரத்தினை விட மிக கடினமானது. அதனால் தான் இதனை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்தனர். இந்த மூலக்கூறு எளிதில் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெறும் 30 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துவிட்டு நீங்கள் கையில் எடுத்துக் கொண்டு கவலையில்லாமல் எங்கும் செல்லலாம்.

மேலும் படிக்க : சென்னைக்கு வந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…

கிராஃபைனோ என்ற நிறுவனம் இந்த கிராஃபைன் மூலக்கூறில் உருவாக்கப்பட்ட பேட்டரிகளை உருவாக்கி வருகிறது. அந்த பேட்டரிகள் எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட்டு 800 கி.மீ வேகத்தில் சோதனை முயற்சியையும் செய்து வெற்றி பெற்றுள்ளது.  2017ம் ஆண்டிலேயே சோதனை முயற்சியாக சாம்சங் நிறுவனம் லித்தியம் - ஐயன் பேட்டரிகளுக்கு பதிலாக கிராஃபைனில் உருவாக்கப்பட்ட பேட்டரிகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்த திட்டமிட்டது. சாம்சங் நிறுவனம் இதற்கு முன்பு 12 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் ஆகும் கிராஃபைன் பாலினை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. வருகின்ற 2020 அல்லது 2021ம் ஆண்டு முதல் இந்த  ஸ்மார்ட்போன்களில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படலாம்.

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment