Great Indian Smartphone Survey 2019 OnePlus Smartphones era : இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிங்காகும் ஒன்ப்ளஸ்! வாடிக்கையாளர்களுக்கு மிக பிடித்த போனாக இருப்பதன் பின்னணி என்ன? இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளிலும் அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஸ்மார்ட்போன்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தையே முற்றிலும் மாற்றிவிடும். அப்படி ஒன்றாக அமைந்திருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள்.
இப்போது எங்கு பார்த்தாலும் யாரிடம் கேட்டாலும் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை தான் வைத்திருப்பதாக சொல்கின்றார்கள். தற்போது இருக்கும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் முக்கியமான அங்கத்தை மட்டும் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் வகிக்கவில்லை. வருங்காலத்தில் இந்த நிறுவனத்தின் கைகள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஓங்கியே இருக்கும் என்றும் தெரிவிக்கிறது தி கிரேட் இந்தியன் ஸ்மார்ட்போன் சர்வே 2019.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
Great Indian Smartphone Survey 2019 OnePlus Smartphones era
இந்த சர்வேயை 91 மொபைல்ஸ் என்ற இணையதளம் மேற்கொண்டு வாடிக்கையாளர்களின் கருத்தினை பதிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இந்த சர்வேயில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களில் 18% பேர் தங்களின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். வருகின்ற மாதங்களில் 12% மேல் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது இருக்கும் 5.7% பங்குகள் 18.3%மாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சார்ஜிங் மற்றும் பேட்டரி (OnePlus Charger and Battery)
ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்துவிதமான யு.எஸ்.பி.களும் மிக விரைவில் சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் பங்கேற்ற மக்களின் 19.5% கருத்து பேட்டரி ‘பேக்-அப்’ தான் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கலாமா வேண்டாமா என்பதை நிர்ணயிக்கிறது என்று கூறியுள்ளனர். ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களில் 69% நபர்கள் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி பெர்ஃபார்மென்ஸ் மிகவும் பிடித்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.
ஹேப்பி கஸ்டமர்களால் ஹேப்பியான ஒன்ப்ளஸ் (OnePlus Customers)
வேறு ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் மட்டும் ஒன்ப்ளஸ் போன்களை விரும்புவதில்லை. தற்போது ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் வருங்காலத்தில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களையே வாங்க விரும்புகின்றார்கள். 10ல் 8 நபர்களுக்கு ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறுகின்றார்கள். ஆப்பிள், சியோமி, மற்றும் ரியல்மி ஸ்மார்போன்களை வீழ்த்தி கஸ்டமர் திருத்திக்கான புள்ளிகளை 79.9%மாக பெற்றுள்ளது இந்த நிறுவனம்.
ஒன்ப்ளஸ் கேமரா
இந்த ஸ்மார்ட்போனை அனைவரும் ரசிக்க மேலும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது என்றால் அது அதன் கேமரா தான். இதுவரை வந்த கேமரா செட்-அப்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தில் கெத்து காட்டிய வண்ணம் நிற்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள். 69.6 % ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் ஸ்மார்ட்போன்களின் கேமராக்கள் மிகவும் பிடித்திருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சர்வீஸ் செண்டர்களுக்கு சென்று திரும்பும் வாடிக்கையாளர்களில் 79% பேர் அவர்களின் சேவைகள் மிகவும் பிடித்திருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் தாங்கள் முதலீடாக அளித்த பணத்திற்கு ஏற்றவகையில் திருப்திகரமாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 62.8% வாடிக்கையாளர்கள் இதே ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் தங்களின் பயணத்தை தொடர விரும்புவதாகவும் அறிவித்துள்ளனர்.