ரத்த வகைகளில் ஒரு புதிய மைல்கல்.. 'க்வாடா நெகட்டிவ்' உலகின் அரிதான ரத்தக் குழு கண்டுபிடிப்பு!

பிரான்சின் குவாதலூப் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், மருத்துவ உலகில் க்வாடா நெகட்டிவ் எனப்பெயரிடப்பட்ட அரிதான ரத்தக் குழு கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச ரத்த மாற்று சங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக 48வது ரத்தக் குழுவாக அங்கீகரித்துள்ளது.

பிரான்சின் குவாதலூப் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், மருத்துவ உலகில் க்வாடா நெகட்டிவ் எனப்பெயரிடப்பட்ட அரிதான ரத்தக் குழு கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச ரத்த மாற்று சங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக 48வது ரத்தக் குழுவாக அங்கீகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Gwada Negative

'க்வாடா நெகட்டிவ்' மருத்துவ உலகில் அரிதான ரத்தக் குழு கண்டுபிடிப்பு!

பிரான்சின் குவாதலூப் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம், மருத்துவ உலகில் 'க்வாடா நெகட்டிவ்' (Gwada Negative) எனப் பெயரிடப்பட்ட புதிய மற்றும் அரிதான ரத்தம் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச ரத்த மாற்று சங்கம் (International Society of Blood Transfusion - ISBT) இதனை அதிகாரப்பூர்வமாக 48வது ரத்தக் குழுவாக அங்கீகரித்துள்ளது.

Advertisment

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, வழக்கமான அறுவை சிகிச்சைக்கான ரத்தப் பரிசோதனையின்போது, இந்த 54 வயதுப் பெண்ணின் ரத்த மாதிரியில் அசாதாரணமான பண்புகள் கண்டறியப்பட்டன. 2011-ல், அவரது ரத்தத்தில் அசாதாரண ஆன்டிபாடி (antibody) கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அப்போதைய தொழில்நுட்ப வசதிகள் இதற்கு மேலும் ஆய்வு செய்ய போதுமானதாக இல்லை. 2019-ல், உயர்-திறன் DNA வரிசைப்படுத்துதல் (high-throughput DNA sequencing) தொழில்நுட்பம் வந்த பிறகு, ஆய்வாளர்கள் மீண்டும் அந்த ரத்த மாதிரியை ஆய்வு செய்தனர். அப்போது, EMM ஆன்டிஜென் (antigen) இல்லாத ஒரு புதிய மரபணு மாற்றம் (genetic mutation) இருப்பது கண்டறியப்பட்டது.

EMM ஆன்டிஜென் என்பது கிட்டத்தட்ட அனைத்து மனிதர்களின் சிவப்பணுக்களிலும் காணப்படும் ஒரு பொதுவான ஆன்டிஜென் ஆகும். இந்த ஆன்டிஜென் இல்லாதது, ரத்த மாற்று மருத்துவத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தற்போது வரை, குவாதலூப் பெண் மட்டுமே இந்த 'க்வாடா நெகட்டிவ்' ரத்தக் குழுவைக் கொண்ட ஒரே நபர் ஆவார். இந்தப் பெண் தனது தந்தை மற்றும் தாய் இருவரிடமிருந்தும் இந்த அரிய மரபணு மாற்றத்தைப் பெற்றிருக்கிறார். இந்த ரத்தக் குழுவைக் கொண்டவருக்கு ரத்தமாற்றம் தேவைப்பட்டால், அவரிடமிருந்து சேமிக்கப்பட்ட ரத்தத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். EMM ஆன்டிஜென் உள்ள வேறு எந்த ரத்தமும் அவரது உடலில் கடுமையான நோயெதிர்ப்பு எதிர்வினையை (immune reaction) தூண்டும். அதாவது, அவர் 'தனக்குத்தானே இணக்கமானவர்' (compatible with herself) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு, ரத்த மாற்று மருத்துவம் மற்றும் மரபணு ஆராய்ச்சியில் புதிய கதவுகளைத் திறக்கிறது. அரிதான ரத்த வகைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதற்கு இது உதவும்.

Advertisment
Advertisements

இந்த புதிய ரத்தக் குழுவுக்கு, அந்தப் பெண்ணின் பூர்வீகப் பகுதியான குவாதலூப்பைக் குறிக்கும் வகையில் "க்வாடா நெகட்டிவ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் பல மொழிகளிலும் எளிதாக உச்சரிக்கக்கூடியது என்பதால் நிபுணர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: