Advertisment

ஹாப்பி ஹோலி 2023: உங்கள் ஹோலி கொண்டாட்டங்களை ஸ்டிக்கர், GIF- ஆக மாற்றி மகிழுங்கள்!

Happy Holi 2023: உங்கள் உற்சாகமான ஹோலி கொண்டாட்டங்களை வீடியோ பதிவு செய்து ஸ்டிக்கர், GIF-ஆக மாற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வாழ்த்து சொல்லுங்கள்.

author-image
WebDesk
New Update
ஹாப்பி ஹோலி 2023: உங்கள் ஹோலி கொண்டாட்டங்களை ஸ்டிக்கர், GIF- ஆக மாற்றி மகிழுங்கள்!

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இந்தாண்டு நாளை (மார்ச் 8) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து கலர் பொடிகள் பூசி மன மகிழ்ச்சியுடன் பண்டிக்கை கொண்டாடப்படும். கலர் பொடிகளில் உள்ள வண்ணங்கள் போல் நம் வாழ்வும் வண்ணமையாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகை நாளில்

நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து கூறுவோம். அந்த வகையில் உங்கள் உற்சாகமான ஹோலி கொண்டாட்டங்களை ஸ்டிக்கர், GIF-ஆக மாற்றி வாட்ஸ்அப்பில் உறவினர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

Advertisment

ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் உருவாக்குவது எப்படி?

personalised ஹோலி ஸ்டிக்கர்கள் உருவாக்க மூன்றாம் தரப்பு செயலி பயன்படுத்த வேண்டும். அதற்கு,

  1. கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று ஸ்டிக்கர் 'மேக்கர் ஆப்' (sticker maker app) தேடி டவுன்லோடு செய்யவும்.
  2. அதில் உங்களுக்கு பிடித்த செயலியை டவுன்லோடு செய்யவும். Sticker Maker, Personal Stickers for WhatsApp, Sticker Studio போன்ற செயலிகளை பயன்படுத்தலாம்.
  3. அடுத்து ஸ்டிக்கர் மேக்கர் செயலியைத் திறந்து அதில் 'கிரியேட்' ( create a new sticker pack) ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
  4. இப்போது திரையில் வரும் தகவல்களைப் பின்பற்றி உங்களுக்கான ஸ்டிக்கர் கிரியேட் செய்து ஸ்டிக்கர் பேக் ஸ்டிக்கர் பேக் அதற்கு ஐகான் கொடுக்கவும்.
  5. ஸ்டிக்கர் save செய்த பிறகு, "Add to WhatsApp"என்று கொடுக்கவும்.
  6. அவ்வளவு தான் இப்போது உங்கள் சொந்த ஸ்டிக்கர் வாட்ஸ்அப்பில் பதிவாகிவிடும். எப்போதும் போல் வாட்ஸ்அப் சேட்டில் ஸ்டிக்கர் பக்கம் சென்று உங்கள் சொந்த ஸ்டிக்கரை அனுப்பி மகிழலாம்.

வாட்ஸ்அப் ஹோலி GIF உருவாக்குவது எப்படி?

GIF உருவாக்கும் முறை ஆண்ட்ராய்டு, ஐபோன் இரண்டிலும் ஒரே செயல்முறைதான்.

  1. வாட்ஸ்அப் ஓபன் செய்து, யாருக்கு GIF அனுப்ப வேண்டுமோ அவர்களின் சேட் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. இப்போது அதில், attachment ஐகான் கிளிக் செய்து, வீடியோ தேர்ந்தெடுக்கவும்.

    3.GIF- ஆக மாற்ற வேண்டிய வீடியோவை உங்கள் gallery-இல் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
  3. video preview window சென்று வீடியோ டூ GIF எனக் கொடுக்கவும்.
  4. இப்போது வீடியோ GIF- ஆக மாற்றப்படும். அந்த GIF-யை send எனக் கொடுத்து உங்கள் நண்பர், உறவினர்களுக்கு பகிரலாம்.
Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment