Happy New Year 2022 Wishes Stickers How to send Happy New year Sickers Tamil News 2022 : புத்தாண்டு வாழ்த்துக்கள் 2022 வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள்: புத்தாண்டு நெருங்கிவிட்டது. உங்களில் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்ப விரும்புவோருக்கு, ஒரு எளிய குறுஞ்செய்தி சலிப்பை ஏற்படுத்தலாம். அதற்கு பதிலாக, வாட்ஸ்அப் மூலம் சில சிறந்த புத்தாண்டு 2022 ஸ்டிக்கர்களை அனுப்பலாம். சில எளிய வழிமுறைகளில் புத்தாண்டு ஸ்டிக்கர்களை உங்கள் ஃபோனிலிருந்து பதிவிறக்கம் செய்து அனுப்புவது எப்படி என்பது இங்கே.
ஸ்டெப் 1: புத்தாண்டு ஸ்டிக்கர் பேக்குகளை நிறுவுதல்
கூகுள் ப்ளே ஸ்டோரில் நிறுவ பல ஸ்டிக்கர் பேக்குகள் உள்ளன. உங்கள் மொபைலில் ப்ளே ஸ்டோரைத் திறந்து, “புத்தாண்டு ஸ்டிக்கர்களை” தேடி, அதனை செயலியில் ஒன்றை நிறுவவும். நாங்கள் முயற்சிக்கும் ஸ்டிக்கர்கள், othapps-ல் “ஹேப்பி நியூ இயர் 2022 ஸ்டிக்கர்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
பயன்பாட்டைத் திறந்து, ஸ்டிக்கர் பேக்குகளை அமைக்க திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். இதனால் அவை வாட்ஸ்அப்பில் கிடைக்கும். பெரும்பாலான பயன்பாடுகளில் ஸ்டில்கள் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் உட்பட பல ஸ்டிக்கர் பேக்குகள் இருக்கும். நீங்கள் விரும்பும் பேக்குகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை வாட்ஸ்அப்பில் சேர்க்கவும்.

ஸ்டெப் 2: வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துதல்
வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் ஸ்டிக்கர்களை அனுப்ப விரும்பும் தனிப்பட்ட சாட் அல்லது குழு சாட்டுக்கு செல்லவும். எமோஜி பட்டனை திறந்து வலதுபுறத்தில் உள்ள ஸ்டிக்கர்கள் டேபிற்கு செல்லவும். இங்கே, நீங்கள் பல ஸ்டிக்கர் பேக்குகளைக் காண்பீர்கள். அவற்றில் நீங்கள் ஸ்டெப் 1-ல் நிறுவியதாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஸ்டிக்கர் பேக்கைத் திறக்க ஸ்டிக்கர் பேக் தலைப்பை க்ளிக் செய்து, நீங்கள் அனுப்ப விரும்பும் ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுக்க ஸ்க்ரோல் செய்யவும். என்ன ஸ்டிக்கர்களை அனுப்புவது என்பது உங்களுக்குத் தெரிந்தவுடன், அவற்றைத் தட்டவும். அவ்வளவுதான்.
மேலே உள்ள படிகளைப் பயன்படுத்தி வேறு எந்த பண்டிகை அல்லது சந்தர்ப்பத்திற்கும் ஸ்டிக்கர்களைச் சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil