ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் சனிக்கிழமையன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்கள்) ஹேக் செய்ய அதிக ஆபத்துகள் இருப்பதாகக் கூறினார். மேலும், அவற்றை திரும்ப பெற அழைப்பு விடுத்தார். இந்தியாவின் முன்னாள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்த அறிக்கையை மறுத்துள்ளார்.
அதில், “பாதுகாப்பான டிஜிட்டல் வன்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என்பதைக் குறிக்கும் ஒரு மிகப்பெரிய பொதுமைப்படுத்தல் அறிக்கை இது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "இந்தியா செய்தது போல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கி எலோன் பயிற்சியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், போர்ட்டோ ரிக்கோவின் முதன்மைத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம்கள் தொடர்பான முறைகேடுகளை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, இ.வி.எம்.களை ஒழிக்க வேண்டும் என்று மஸ்க்கின் அறிக்கை வந்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க், “நாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது ஏ.ஐ மூலம் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறியதாக இருந்தாலும், இன்னும் அதிகமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கருப்புப் பெட்டி இ.வி.எம்: ராகுல் காந்தி
இதற்கிடையில், எக்ஸில் எலான் மஸ்க்கின் அறிக்கையை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை, “இந்தியாவில் இ.வி.எம்.கள் ஒரு "கருப்பு பெட்டி" என்று கூறினார். அதை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படவில்லை, மேலும் நாட்டின் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து "கடுமையான கவலைகள்" எழுப்பப்படுகின்றன என்று வலியுறுத்தினார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : ‘Happy to run a tutorial…’: Rajeev Chandrasekhar after Elon Musk calls for scrapping of EVMs
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“