சூரிய ஒளியே ஆற்றல், சென்சார்... வெயில் அதிகமானால் அதிர்ந்து எச்சரிக்கும் பேண்டேஜ்!

கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, 'Hapt-Aids' என்ற புதிய அணியக் கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இது ஒரு மெல்லிய, பேண்டேஜ் போன்ற பேட்ச் ஆகும்.

கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, 'Hapt-Aids' என்ற புதிய அணியக் கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இது ஒரு மெல்லிய, பேண்டேஜ் போன்ற பேட்ச் ஆகும்.

author-image
Meenakshi Sundaram S
New Update
self-powered skin patch

சூரிய ஒளியே ஆற்றல், சென்சார்... வெயில் அதிகமானால் அதிர்ந்து எச்சரிக்கும் பேண்டேஜ்!

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: வெயில் நிறைந்த ஒரு மதிய வேளையில் வெளியே செல்கிறீர்கள். நீண்ட நேரம் வெயிலில் இருந்து உங்க சருமம் பாதிக்கப்படும் நிலையில், ஒரு அலாரம் அடிக்கிறது. ஆனால், அது போன் அலாரம் அல்ல. உங்க தோலில் ஒட்டப்பட்டுள்ள ஒரு சின்ன பேண்டேஜ், மென்மையாக அதிர்ந்து, "போதும், உள்ளே செல்லுங்கள்!" என்று உங்களுக்கு சொல்கிறது. இந்த எதிர்காலத் தொழில்நுட்பம்தான் 'Hapt-Aids' கார்னகி மெலன் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அணியக் கூடிய சாதனங்களின் (Wearables) உலகையே மாற்றப் போகிறது.

Advertisment

சூரிய ஒளியே பேட்டரி, சூரிய ஒளியே சென்சார்

Hapt-Aids என்பது மெல்லிய, பேண்டேஜ் போன்ற ஒட்டும் பட்டை. இதன் சிறப்பு என்னவென்றால், இது முற்றிலும் பேட்டரி இல்லாமல் இயங்குகிறது. இது எப்படி சாத்தியம்? இந்த பேட்ச்சில் சூரிய மின்கலம் (Flexible Solar Cell) உட்பொதிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி இதன் மீது படும்போது, அது மின்சாரம் உற்பத்தி செய்கிறது. உற்பத்தி செய்யப்படும் இந்த மின்சாரத்தின் அளவுதான், நீங்க எவ்வளவு நேரம், எவ்வளவு தீவிரமான வெயிலில் இருக்கிறீர்கள் என்பதை அளவிடப் பயன்படுகிறது. சூரிய ஒளியைக் கொண்டே இயங்கி, சூரிய ஒளியையே அளவிடும் ஒரு தன்னிறைவு பெற்ற (Self-Sustaining) சாதனம் இது. சார்ஜ் போடுவது, பேட்டரி மாற்றுவது போன்ற எந்தத் தொந்தரவும் இல்லை.

நீங்க வெயிலில் இருக்கும் நேரம், விஞ்ஞானிகள் நிர்ணயித்த ஒரு பாதுகாப்பான வரம்பை அடைந்தவுடன், Hapt-Aids அமைதியாகச் செயல்படத் தொடங்கும். இது ஒரு திரை அல்லது ஒலி மூலம் எச்சரிக்காது. பதிலாக, உங்கள் சருமத்தில் ஒரு மெல்லிய அதிர்வை (Haptic Response) ஏற்படுத்தும். இந்த அதிர்வு, "போதும், நிழலைத் தேடுங்கள்" என்று உங்களுக்கு மட்டுமே புரியும் ரகசிய சிக்னல் போல இருக்கும். இதனால், உங்க போனை எடுத்துப் பார்க்கவோ, வெளிச்சத்தில் திரையைப் படிக்கச் சிரமப்படவோ வேண்டியதில்லை.

சாதாரணமாக வெயிலில் வேலை செய்பவர்களுக்கு, கடற்கரையில் சூரியக் குளியல் அல்லது தெரபி போன்ற காரணங்களுக்காகக் குறிப்பிட்ட நேரம் வெயில் தேவைப்படுபவர்களுக்கு இந்தச் சாதனம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும். இது மிக நெகிழ்வானது என்பதால், சருமத்துடன் ஒட்டி, நீங்க ஓடினாலும், அசைந்தாலும் ஒட்டிக்கொண்டே இருக்கும். பேட்டரி இல்லாததால், சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இதில் இல்லை. இந்த Hapt-Aids-இன் அடிப்படைத் தத்துவம், வருங்காலத்தில் உடலின் நீரேற்றம் (Hydration), புற ஊதாக் கதிர்வீச்சு அளவு அல்லது காயங்கள் குணமாகும் வேகம் போன்ற மற்ற முக்கியமான மருத்துவப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.

Advertisment
Advertisements

அதிக ஆற்றல், அதிகமான கனமான சாதனம் என்ற வழக்கமான தொழில்நுட்ப சிந்தனைகளை உடைத்து, இந்த Hapt-Aids பேட்ச், தொழில்நுட்பம் என்பது கண்ணுக்குத் தெரியாமல், நமது உடலுடன் இயைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: