பராமரிப்பு பணிகள் காரணமாக ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் யு.பி.ஐ சேவைகள் நாளை (நவ.4) சில மணி நேரங்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி வங்கிஅதன் டிஜிட்டல் வங்கி சேவையின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த இந்த மாதத்தில் யு.பி.ஐ சேவைகளுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
பராமரிப்பு பணியின் போது, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் யு.பி.ஐ சேவைகள் கூகுள் பே, போன் பே, பே டி.எம்-ல் பணம் அனுப்பும் எந்த சேவையும் செயல்படாது எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 5, 2024 - காலை 12:00 முதல் 2:00 மணி வரை (2 மணி நேரம்)
நவம்பர் 23, 2024 - காலை 12:00 முதல் 3:00 மணி வரை (3 மணி நேரம்) என 2 நாட்கள் இந்த நேரங்களில் யு.பி.ஐ சேவைகள் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“