HDFC Mobile Banking App : இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்.டி.எஃப்.சி வங்கியின் மொபைல் பேங்கிங் அப்ளிகேசன் கடந்த ஐந்து நாட்களாக வேலை செய்யவில்லை. மிக சமீபத்தில் தான் நெட் பேங்கிங் அப்ளிகேசனை வெளியிட்டது எச்.டி.எஃப்.சி நிறுவனம்.
நவம்பர் 28ம் தேதி முதல் வேலை செய்யாத காரணத்தால், பழைய அப்ளிகேசனை மீண்டும் செயல்படுத்தும் வசதியை இன்று இரவுக்குள் கொண்டு வரப்படும் என்று எச்.டி.எஃப்.சி நிறுவனம் அறிவித்திருக்கிறது.
தொடர்ந்து வாடிக்கையாளர்களின் புகார்களை சந்தித்து வந்த காரணத்தால், தங்களின் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியது எச்.டி.எஃப்.சி நிறுவனம்.
HDFC Mobile Banking App - ஐந்தாவது நாளாக வேலை செய்யவில்லை
28ம் தேதி எச்.டி.எஃப்.சி நிறுவனம், தொடர் ட்ராஃபிக் காரணமாக செயலி வேலை செய்யவில்லை என்றும், அதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் செயலியை உபயோகிக்க இயலவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். அந்த பிரச்சனைகளை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறிக்கை வெளியிட்டது.
நவம்பர் 29ம் தேதி எச்.டி.எஃப்.சியின் வாடிக்களையார்கள் சேவைப் பிரிவில் இருந்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆப் வேலை செய்யவில்லை. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம். பழைய ஆப்பினை பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து அதையே பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்து.
மொபைல் பேங்கிங் மட்டுமே வேலை செய்யவில்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், பேஸாப், மிஸ்ட்கால் பேங்கிங் போன்ற வசதிகள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு ட்விட்டரில் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள் எச்.டி.எஃப்.சி நிர்வாகிகள்.
ஆப்பிள் போன்களில் மொபைல் பேங்கிங் லாகின் செய்ய இயலாமல் போகும் போது, பழைய வெர்சனுக்கு ரீ டிரைக்ட் செய்கிறது. அதனைத் தொடர்ந்து ஆப் ஸ்டோருக்குச் செல்லும் போது, பழைய ஆப் இல்லை என்று ஆப் ஸ்டோரில் நோட்டிஃபிகேஷன் வருகிறது.
மொபைல் பேங்கிங் வேலை செய்யும் வரை, வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேவையினை நெட் பேங்கிங் மூலம் தொடரலாம்.