வாட்ஸ் ஆப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படம்; சில நிமிடங்களில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் மாயம்

உங்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கு, புதிய தந்திரங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர். அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் ஆப்பை புதிய யுக்தியாக அவர்கள் கையாண்டு வருகின்றனர்.

உங்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கு, புதிய தந்திரங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர். அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் ஆப்பை புதிய யுக்தியாக அவர்கள் கையாண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
WhatsApp scam

ஒரு அதிகாலையில், 28 வயதான பிரதீப் ஜெயின் என்பவருக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே எண்ணிலிருந்து அவருக்கு ஒரு செய்தி வந்தது: “இவரை உங்களுக்குத் தெரியுமா?” என்ற கேள்வியுடன் ஒரு முதியவரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: He downloaded a WhatsApp image. Minutes later, Rs 2 lakh was gone

மதியம் சுமார் 1:35 மணியளவில் அந்தப் புகைப்படத்தை அவர் பதிவிறக்கினார். அந்த ஒரே க்ளிக்கில், அவரது செல்போனை பயன்படுத்தும் வகையில் அவரது போன் ஹேக் செய்யப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டது. பணப்பரிவர்த்தனையை சரிபார்க்க கனரா வங்கியில் இருந்து அழைப்பு வந்தபோது, ​​மோசடி செய்பவர்களால் ஜெயின் குரலைப் பிரதிபலிக்க முடிந்தது. 

இந்த மோசடி, குறைந்த குறிப்பிடத்தக்க பிட் (LSB) ஸ்டெகனோகிராஃபியைப் பயன்படுத்துகிறது. இது படங்கள் அல்லது ஆடியோ போன்ற மீடியா கோப்புகளுக்குள் தரவுகளை மறைக்கும் ஒரு நுட்பமாகும்.

Advertisment
Advertisements

"ஸ்டெகனோகிராபி' என்ற வார்த்தையானது கிரேக்க தோற்றம் கொண்டது. இதற்கு 'மறைக்கப்பட்ட எழுத்து' என்று பொருள். சைபர் கிரைமில், தீங்கற்ற தோற்றமுடைய மீடியா கோப்புகளுக்குள் ரகசிய வழிமுறைகளை உட்பொதிக்க இந்த நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மறைக்கப்பட்ட பேலோடுகள் பெரும்பாலும் பாரம்பரிய கண்டறிதல் அமைப்புகளைத் தவிர்க்கின்றன மற்றும் குறிப்பிட்ட ஸ்கிரிப்ட்களால் மட்டுமே தூண்டப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

"இது புதிய முறை அல்ல.  2017 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப் மூலமாக பகிரப்பட்ட  GIF கோப்புகளுக்குள் ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் இயங்கக்கூடிய குறியீட்டை உட்பொதித்தனர். இதனை பதிவிறக்கம் செய்யப்பட்ட போது, ​​மறைக்கப்பட்ட குறியீடு பின்னணியில் இயங்கியது" என்று சைபர் நிபுணர் துஷர் ஷர்மா தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த படங்கள் அல்லது ஆடியோ கோப்புகளில் வெளிப்படையான ஆபத்து போன்ற தோற்றம் கிடையாது. அதனால்தான் பெரும்பாலும் வைரஸ் தடுப்பு மென்பொருள் போன்றவையால் இவற்றை கண்டறிய முடிவதில்லை. ஏ.ஐ தொழில்நுட்பத்தை கூட இவை எளிதாக கடந்து விடும் வகையில் இருக்கலாம்" என்று வல்லுரர்கள் கூறுகின்றனர்.

இதற்காக .jpg, .png, .mp3, .mp4, PDF-கள் போன்ற கோப்பு வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ஏனெனில், இந்த வடிவங்கள் நம்பகமானவையாகத் தோன்றி அடிக்கடி பரிமாறப்படுகின்றன.

தாக்குதல் எவ்வாறு செயல்படுகிறது

"பெரும்பாலான படங்கள் வண்ணத்திற்கு மூன்று பைட் தரவுகளைப் பயன்படுத்துகின்றன - சிவப்பு, பச்சை மற்றும் நீலம். இத்தகைய படத்தை நீங்கள் பதிவிறக்கும் போது உங்கள் முக்கியமான தரவுக்கான அணுகலைப் பெறுகிறது" என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள முடியும்?

1. உங்களுக்கு தெரியாத நபர்கள் அனுப்பும் படங்களை அல்லது கோப்புகளை பதிவிறக்கம் செய்யக் கூடாது. 

2. உங்கள் போனை எப்போதும் அப்டேட்டாக வைத்துக் கொள்ளுங்கள். இது பாதுகாப்பை அதிகப்படுத்தும்.

3. தானியங்கு - பதிவிறக்கத்தை முடக்கி வைத்திருங்கள். இது ஆபத்தான புகைப்படங்கள் பதிவிறக்கப்படுவதன் அபாயத்தை குறைக்கும்.

4. உங்களுக்கு தெரிந்த நபர்களை போன்று மோசடிக்காரர்கள் பேசுவார்கள். அதனால், ஓ.டி.பி-களை பகிரக் கூடாது. 

5. குழு சேர்த்தல்களை வரம்பிடவும்: சந்தேகத்திற்கிடமான குழுக்களில் சேர்க்கப்படுவதைத் தடுக்க, இதற்கான அனுமதியை மாற்றி அமைக்கவும். 

இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்கள் போன் மற்றும் வாட்ஸ் ஆப்பை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

- Ankita Deshkar

Whatsapp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: