இந்த 5-ல் ஒரு போன் உங்ககிட்ட இருந்தாப் போதும்… அவசரத்திற்கு டாக்டர் தேவையில்லை

Heart rate sensor phones : ஸ்மார்ட் பொருட்களான ஜியோமி மி பேண்ட் 4, சாம்சங் கேலக்ஸி வாட்ச், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்டவைகளிலும் இந்த ஹார்ட் ரேட் சென்சார் வசதி உள்ளது.

By: August 24, 2020, 8:02:26 AM

Heart rate mobile phones tamil news: கொரோனா தொற்று பாதிப்பு பரவிவரும் இந்நேரத்தில், நாம் அனைவரும் நமது உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண் லாவா மொபைல்ஸ் நிறுவனம், இதய துடிப்பு சென்சார் வசதி கொண்ட போனை லாவா பல்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை ஏற்கனவே, பல போன் நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளன.

2014ம் ஆண்டிலேயே, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்5 போனில், இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. கேலக்ஸி எஸ்10 வரை இந்த வசதியை தொடர்ந்த சாம்சங் நிறுவனம், பின் இந்த வசதியை நிறுத்திக்கொண்டது. தற்போது அந்த வசதியை பல்வேறு மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

இந்தியாவில்,தற்போது இந்த வசதியுடன் கிடைக்கும் மொபைல்போன்கள் குறித்து காண்போம்

Lava Pulse

இது ஒரு பேசிக் போன் ஆகும். ரூ.1,949 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போனில் உள்ள இந்த வசதியின் மூலம், இதயதுடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளை கண்டறியலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 6 நாட்கள் வரை, இந்த போனில் சார்ஜ் நீடிக்கும் என்பது இதன் தனிச்சிறப்பு.

Samsung Galaxy S8/S8 Plus

சாம்சங் நிறுவனம், 2017ம் ஆண்டிலிருந்து கேலக்ஸி எஸ்8 சீரிசை அறிமுகம் செய்துவருகிறது. கேலக்ஸி எஸ் 8 மற்றும் எஸ் 8 பிளஸ் போன்களில், இதயத்துடிப்பு சென்சார், பின்பகுதியில் கேமராவுக்கு அருகில் உள்ளது. சாம்சங் ஹெல்த் செயலியின் உதவியுடன் இந்த சென்சார் இயங்குகிறது. இந்த சென்சாரில் நம் விரலை வைத்தால், அது இதயத்துடிப்பை அளவிடும். இந்த போன் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது விற்பனையாகி வரும் கேலக்ஸி எஸ்8 பிளஸ் போன், பிளிப்கார்ட்டில், ரூ.53,990க்கு கிடைக்கிறது. செகண்ட் ஹேண்ட் போன்களும் சந்தையில் உள்ளன.

 

Samsung Galaxy Note 8

சாம்சங் கேலக்ஸி நோட் 8 போனிலும், ஹார்ட் ரேட் சென்சார் உள்ளது. இது ஹை ரெசலுசன் சென்சார் ஆகும். டுயல் கேமரா செட்அப் உடன் உள்ள இந்த போன் அமேசானில், ரூ.45,770க்கு கிடைக்கிறது.

Samsung Galaxy S9/S9 Plus

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ் 10 சீரிஸ் உடன் ஹார்ட் ரேட் சென்சார் வசதியை நிறுத்திவிட்டது. கேலக்ஸி எஸ் 9 மற்றும் எஸ் 9 பிளஸ், இந்த வசதியுடன் வந்த கடைசி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன், அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைப்பதில்லை. இதன் விலை ரூ.30 ஆயிரத்திற்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy Note 9

சாம்சங் கேலக்ஸி நோட் 9 போனில், ஹை ரெசலுசன் சென்சார் உள்ளது. எஸ் -பென் உள்ளிட்ட சிறப்பு அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த போனின் விலை, ரூ.73,600லிருந்து துவங்குகிறது. இந்த போன், விழாக்காலங்களில் தள்ளுபடி விலையில், ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்லாது, ஸ்மார்ட் பொருட்களான ஜியோமி மி பேண்ட் 4, சாம்சங் கேலக்ஸி வாட்ச், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்டவைகளிலும் இந்த ஹார்ட் ரேட் சென்சார் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Corona pandemic heart rate sensor samsung lava phone heart rate sensor heart rate sensor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X