5G என்பது வேகமான பதிவிறக்கங்கள் மற்றும் 4K வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்வது மட்டுமே என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. 5G பயன்பாடுகளும் சேவைகளும் உண்மையான கேம் சேஞ்சர்களாக இருக்கும்.
நாட்டின் அதிவேக நெட்வொர்க் ஆன 5ஜி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 5G மூலம் நம் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
5G என்றால் என்ன?
5G செல்லுலார் நெட்வொர்க்குகளின் ஐந்தாவது தலைமுறையாகும், இது தொழில்நுட்ப ரீதியாக 4G ஐ விட 100 மடங்கு வேகமானது. எளிமையான சொற்களில், 5G ஒரு தொழில்நுட்பமாக மொபைல் நெட்வொர்க்குகளில் வயர்டு பிராட்பேண்ட் போன்ற அலைவரிசையை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.
இதன் பொருள் ஒரு பயனராக நீங்கள் 5G நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும் போது உங்கள் 5G திறன் கொண்ட ஸ்மார்ட்போனில் பிராட்பேண்ட் போன்ற வேகத்தைப் பெறுவீர்கள்.
மேலும், 4K உள்ளடக்கத்தைப் பயன்படுத்தவும் மற்றும் குறுகிய காலத்தில் பெரிய கோப்புகளைப் பதிவிறக்கவும் முடியும்.
5G பயன்பாடுகள்
எக்ஸ்பிரஸ்வேகளைப் போலவே, 5ஜி பயனர்கள் வேகமான இயக்கத்தையும், குறைந்த டவுன்லோடு நேரங்களையும் அனுபவிப்பார்கள்.
அந்த வகையில் 5ஜி அலைவரிசை கீழ்காணவற்றில் மாற்றங்களை கொண்டுவரும். அவை, பொழுதுபோக்கு, சுகாதாரம், கல்வி, துரித நெட்வொர்க் மற்றும் சீர்மிகு நகரங்கள் ஆகும்.
பொழுதுபோக்கை பொறுத்தமட்டில், குறைந்த தாமதத்துடன், நேரலை நிகழ்வைப் பார்ப்பது, போட்டி கேம் விளையாடுவது, VR அனுபவங்கள் மற்றும் சிறந்த OTT அனுபவங்கள் ஆகியவை சாத்தியமாகும்.
அதேபோல் சுகாதாரத் துறைக்கு 5ஜி பல்வேறு அதிகாரங்களை அளிக்கும். HD அல்லது 4K தரத்தில் மெய்நிகர் ஆலோசனைகள் மற்றும் பிற தொலைநிலை சுகாதாரப் பணிகள் என இது நீளும். மேலும், அறுவைசிகிச்சைகளில் தொலைதூர ஒத்துழைப்பு எளிதாகிவிடும்.
கல்வியில், 5G தொலைநிலைக் கற்றல் ஒரு பெரிய ஊக்கத்தைப் பெறும். மாணவர்கள் வீடியோக்கள் மற்றும் கற்றல் பொருட்களை விரைவாக பதிவிறக்கம் செய்ய முடியும், மேலும் அவர்களின் வகுப்பறையில் விருந்தினர் பேச்சாளர்களின் ஹாலோகிராம்கள் கூட தொய்வு அல்லது தாமதம் இல்லாமல் இருக்கும்.
சீர்மிகு நகரங்களை பொறுத்தவரை இணைக்கப்பட்ட போக்குவரத்து விளக்குகள், ட்ராஃபிக் கேமராக்கள், பொதுப் போக்குவரத்தின் நேரடி கண்காணிப்பு சென்சார்கள் சாதனங்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கியது.
இதுமட்டுமின்றி தெரு விளக்கு மேலாண்மை, பார்க்கிங் மேலாண்மை, கட்டிட மேலாண்மை மற்றும் பலவற்றில் 5G பயன்பெறும். ஆகவே உங்களது செல்போனில் 5ஜி நெட்வொர்க் வேகத்தை கண்காணித்துக் கொள்ளுங்கன். எனினும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்னமும் முழுமையான 5ஜி சேவை நமக்கு கிடைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“