scorecardresearch

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி? 4 சிம்பிள் ஸ்டெப்ஸ்!

வாட்ஸ்அப்பில் எளிய முறையில் பணம் அனுப்புவது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி? 4 சிம்பிள் ஸ்டெப்ஸ்!

வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் நிறுவனம் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்தது. கூகுள் பே, பே டி எம் போல் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்தது. ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் யுபிஐ வசதி பலருக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப ‘₹’ ஐகானை கிளிக் செய்ய வேண்டும். 4 எளிய வழிகளை பின்பற்றி பணம் அனுப்பலாம்.

Step 1

முதலில் உங்கள் வங்கி கணக்கை யுபிஐ உடன் லிங்க் செய்ய வேண்டும். இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். வங்கி கணக்கு மற்றும் உங்கள் வாட்ஸ்அப் எண் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். வங்கி கணக்குடன் இணைத்தவுடன் கூகுள் பே போல், யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் சேட் பக்கத்திற்கு சென்று Attach > Payment கொடுக்க வேண்டும்.
அடுத்து எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு Next எனக் கொடுத்து Get Started ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். accept our Payments Terms and Privacy Policy கொடுத்து, Accept கிளிக் செய்து Continue கொடுக்க வேண்டும்.

அடுத்து வங்கி பக்கத்தில், வங்கியின் பெயர் குறிப்பிட்டு, SMS> Allow கொடுக்க வேண்டும். முன்பே போனுக்கு அனுமதி கொடுத்திருந்தால், இது தேவையில்லை. டெபிட் கார்டு அனுமதி கொடுத்து, தகவல்கள் பதிவு செய்து Verify Card ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

Step 2

வாட்ஸ்அப்பில் வங்கி கணக்குடன் இணைத்தவுடன் பணம் அனுப்புவது எளிது. உங்கள் contactயில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பலாம். யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் சேட் பக்கத்திற்கு சென்று ‘₹’ ஐகானை கிளிக் செய்து, தொகையை குறிப்பிட்டு Next பட்டன் கொடுத்து Send Payment கொடுக்க வேண்டும்.

Step 3

இப்போது நீங்கள் பிரத்யேகமாக செட் செய்த UPI PIN எண்ணை குறிப்பிட வேண்டும். PIN செட் செய்யவில்லை என்றால் இப்போது செய்ய வேண்டும். அதனால் உங்கள் டெபிட் கார்டில் உள்ள கடைசி 6 இலக்க எண்ணை குறிப்பிட்டு, கார்டு expiration date கொடுக்க வேண்டும்.

Step 4

இதை கொடுத்த பிறகு, தொகை சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். பணம் சென்று விட்டதா என்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்அப் சேட் பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம். அல்லது கடைசி டிரான்சாக்ஸன் payments settings மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Heres how to make upi payments on whatsapp in four easy steps