ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சார்பாக Hero Vida V2 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லைட், பிளஸ் மற்றும் புரோ போன்ற வேரியண்ட்களில் இது கிடைக்கிறது. இதில் Hero Vida V2 லைட் மாடல், Ather Rizta எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக உள்ளதா என ஒப்பிட்டு காணலாம்.
Hero Vida V2 vs Ather Rizta: என்ஜின் விவரக்குறிப்புகள்
Hero Vida V2 மூன்று பேட்டரிகளில் கிடைக்கிறது - 2.2 kWh, 3.44 kWh மற்றும் 3.94 kWh. அகற்றக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்தை Hero Vida V2 தொடர்ந்து பயன்படுத்துகிறது. ஹீரோ நிறுவனத்தின் கூற்றுப்படி, மூன்று V2 ஸ்கூட்டர்களும் 5.2 bhp மற்றும் 25 Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறனை கொண்டவை. லைட் வெர்ஷனில் 94 கிமீ IDC வரம்பைக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 69 கிமீ வேகத்தில் எக்கோ மற்றும் ரைடு மோடுகளில் செல்லக்கூடியவை. 3 மணி நேரம் 30 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
Ather Rizta இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்குகிறது, 2.9 kWh மற்றும் 3.7 kWh. 2.9 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட், 5.7 bhp மற்றும் அதிகபட்ச வேகமாக 80 kmph செல்லக்கூடியது. 123 கிமீ வரம்புடன், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4.7 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 40 கிமீ வேகத்தை எட்டும். மேலும், ஜிப் மற்றும் ஸ்மார்ட் எகோ ஆகிய இரண்டு ரைடு மோடுகள் உள்ளது. இது 6 மணி நேரம் 30 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படுகிறது. 3.7 kWh பேட்டரி 159 கிமீ ரேஞ்சில், அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. இது 4 மணி நேரம் 30 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது.
Hero Vida V2 vs Ather Rizta: அம்சங்கள்
Vida V2 ஆனது 7-இன்ச் டிஎஃப்டி ரைடர் கன்சோல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஃபாலோ மீ லைட்களுடன் கூடிய அனைத்து எல்இடி விளக்குகள், புளூடூத் கனெக்டிவிட்டி, க்ரூஸ் கன்ட்ரோல், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் 26 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Rizta 34-லிட்டர் அண்டர்-சீட் பூட் மற்றும் 22-லிட்டர் ஃப்ரங்க் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு வேரியண்டில் சாதரண 7-இன்ச் டிஸ்ப்ளேவும், மற்றொரு வேரியண்டில் 7-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளேவும் உள்ளது. இதில், கூகுள் மேப் நேவிகேஷைன் இடம்பெற்றுள்ளது.
Hero Vida V2 vs Ather Rizta: விலை
புதிய Vida V2 ரூ.96,000 முதல் ரூ. 1.35 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், Ather Rizta, ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.1.47 லட்சமாக எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.