ஹீரோ மோட்டோகார்ப், Hero Xpulse 200 4V Pro Dakar என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, சந்தையில் கிடைக்கும் Hero Xpulse 200 4V பைக்கின் அப்டேட்டட் வெர்ஷனாக இதனை களமிறக்கியுள்ளனர். இதில் ஆஃப்-ரோடிங்கின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிப்புற தோற்றத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hero Xpulse 200 Dakar — மாற்றங்கள் என்ன?
முதலில் வெளிப்புற தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் இருந்து தொடங்கலாம். இதன் பக்கவாட்டு பேனல்கள், ஹீரோ ரேலி மோட்டார்சைக்கிள்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. Dakar என்ற லோகோ, வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது அமைந்துள்ளது. இந்த இரண்டு மாற்றங்களும் பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது.
அடுத்த அட்டகாச அப்டேட்டாக முன்புற டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் அமைந்துள்ளன. இந்த 250 மில்லி மீட்டர் டெலஸ்கோபிக் ஃபோர்க், பயணத்தை எளிதாக்குகிறது. அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸாக 270 மிமீ கொடுக்கப்பட்டுள்ளது. கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் கிரவுண்ட் கிளியரஸ் 263 மிமீ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் ரோட், ஆஃப் ரோட், மற்றும் ரேலி என மூன்று ஏபிஎஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
Hero XPulse 200 Dakar — இஞ்சின் விவரக்குறிப்புகள்
Xpulse 200 Dakar வெர்ஷன் இஞ்சினில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அதே 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு இஞ்சின் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 கியர் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்ட, ஸ்போர்க் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எல்.சி.டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இதில் இடம்பெற்றுள்ளது. 18.9 பி.ஹெச்.பி பவரும், 17.3 என்.எம் டார்க்கும் இதன் கூடுதல் அம்சங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“