Nokia G42 5G: நோக்கியா ஃபோனின் தாய் நிறுவனமான HMD குளோபல், நோக்கியா ஜி42 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. நீண்ட பேட்டரி லைவ், நிலைத்தன்மை ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. அதே போல் இதன் சிறப்பம்சம் iFixit உடன் இணைந்து போனில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் பயனர்களே எளிதாக சரி செய்யும் வகையில் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிராக் விழுந்த ஸ்கிரீன், வளைந்த சார்ஜிங் போர்ட்கள் மற்றும் பேட்டரிகள் ஆகியவற்றை பயனர்களே எளிதாக சரி செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. iFixit ஒத்துழைப்பு பயனர்களுக்கு எளிதாக பழுது நீக்கும் வழிமுறைகளை வழங்குகிறது. அதோடு குறைந்த விலையில் பாகங்களையும் வழங்குகிறது. நோக்கியா ஜி42 நோக்கியா நிறுவனத்தின் முதல் ரீபேரபில் 5ஜி ஸ்மாட்போனாகும்.
பிற அம்சங்கள்
நோக்கியா G42 5G ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5G ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4+128 GB மற்றும் 6+128 GB ரேம், ஸ்டோரேஜ் வசதிகளை வழங்குகிறது. கேமரா அமைப்பில் 50 எம்பி ப்ரைமரி, 2 எம்பி டேப்த், மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார்களைக் கொண்டுள்ளது. அதோடு 8 எம்.பி ப்ரண்ட் செல்ஃபி சென்சார் கொண்டுள்ளது.
6.56 இன்ச் எல்.சி.டி டிஸ்ப்ளே, 720 x 1612 ரெசல்யூஷன் மற்றும் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 5,000mAh பேட்டரி 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது,
Nokia G42 5G ஆனது ஆண்ட்ராய்டு 13 இல் துவங்குகிறது மற்றும் 3 வருட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் 2 வருட OS மேம்படுத்தல்களைப் பெறுகிறது. நிறுவனத்தின் Nokia.com அதிகாரப்பூர்வ தளத்தில் ஸ்மாட்போனை வாங்கலாம். சோ பர்பிள் மற்றும் சோ கிரே ஆகிய நிறங்களில் போன் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“